Published : 07 Jul 2014 11:10 AM
Last Updated : 07 Jul 2014 11:10 AM

மலரும் நினைவுகளுடன் ‘ஆர்குட்’க்கு விடை கொடுக்கும் ரசிகர்கள்- செப்-30ல் மூடப்படுவதால் புகைப்படங்களை பாதுகாக்க தீவிரம்

‘பேஸ்புக்’ என்ற வார்த்தை நமக்கு அறிமுகம் இல்லாத காலத்தில் ‘ஆர்குட்’டை தான் அனைவரும் பயன்படுத்தி வந்தனர். இன்று அனைவரும் அறிந்த சமூக வலைதளமாக ‘பேஸ்புக்’ இருந்தாலும் அதன் முன்னோடியாக திகழ்ந்தது ‘ஆர்குட்’ தான். பலர் அதை தொடர்ந்து பயன்படுத்தவில்லை. இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் 30-ம் தேதியுடன் அது மூடப்படுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே பலர் தங்களது பழைய ‘ஆர்குட்’ பதிவுகளை மலரும் நினைவுகளுடன் பார்த்து வருகின்றனர்.

ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றும் திருநெல்வேலியைச் சேர்ந்த சுகந்தி தனது 11-ம் வகுப்பில் ‘ஆர்குட்’ கணக்கை தொடங்கியுள்ளார். தற்போது அதை மீண்டும் பார்க்கும்போது பல இனிய நினைவுகளை தருகிறது என்கிறார் அவர். சுகந்தி மேலும் கூறுகையில், “எனது பள்ளி நண்பர்களின் குழந்தைத்தனமான பதிவுகளை தற்போது பார்ப்பது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது. ‘ஆர்குட்’டில் அவர்களது வயது இன்னும் 16 என்று உள்ளது. இதைப் பார்க்க வேடிக்கையா இருக்கிறது. நம்மைப் பற்றி நமக்கு விருப்பமானவர்கள் எழுதக் கூடிய டெஸ்டிமோனியல்களை படிக்க படிக்க ஆசையாய் இருக்கிறது. ‘ஆர்குட்’ மூடப்படும் என்பதால், டெஸ்டிமோனியல்களை ‘ஸ்கிரீன் ஷாட்’ (படப்பதிவு) எடுத்து வைத்துக் கொண்டேன்” என்றார்.

பரிதி என்பவர் கூறுகையில், “ஆர்குட் பிரபலமாக இருந்தபோது, அதில் பல குரூப்-கள் இருந்தன. அதில் நாங்கள் விவாதித்திருந்ததை வாசித்து பார்த்தேன். அங்கிருந்த நண்பர்களோடு நான் இதுவரை தொடர்பில் இல்லை. ஆனால், தற்போது, அவர்களை பேஸ்புக்கில் தேடிக் கண்டுபிடித்துள்ளேன்” என்றார்.

சதீஷ் கூறுகையில், “எனது கல்லூரி நண்பர்களின் ஏராளமான புகைப்படங்களை பார்த்து ரசித்தேன். எல்லோரும் மிகச் சிறியவர்களாக இருந்தபோது எடுக்கப்பட்ட படங்கள் அவை” என்றார்.

தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் லாவண்யா கூறுகையில், “பேஸ்புக் இப்போது எல்லாருக்கும் பிடித்திருக்கிறது. ஆனால், இதற்கு முன்னோடி ‘ஆர்குட்’ தான் என்பதை மறந்து விடக்கூடாது.

‘ஆர்குட்’டில் எனக்கு பிடித்ததே, அதில் பிறர் எழுதக் கூடிய டெஸ்டிமோனியல் தான். அதை எடுத்து, பலர் தங்களது டிவிட்டர் கணக்குகளிலும் பதிவு செய்திருந்தனர்” என்றார்.

‘ஆர்குட்’ மூடப்படவிருப்பதால் அதில் இருக்கும் புகைப்படங் களை, தங்களது ‘பேஸ்புக்’ அக்கவுன்ட்டுக்கு அவசர, அவசரமாக பலரும் அனுப்பி வருகின்றனர்.

‘ஆர்குட்’டில் தங்களது புரொபைலை யார் பார்த்தார்கள் என்பதை எளிதில் அறிந்து கொள்ள முடியும். ‘பேஸ்புக்’கில் இந்த வசதியைப் பெற வேண்டு மெனில் அதற்கென தனி செய லியை பதிவிறக்கம் செய்ய வேண்டியிருப்பதையும் ‘ஆர்குட்’ ரசிகர்கள் சுட்டிக்காட்டினர்.

‘ஆர்குட்’ மூடப்படவிருப்பதால் அதில் இருக்கும் புகைப்படங்களை, தங்களது ‘பேஸ்புக்’ அக்கவுன்ட்டுக்கு அவசர, அவசரமாக பலரும் அனுப்பி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x