

வி
ர்ச்சுவல் ரியாலிட்டி, 360 கோணத்திலான வீடியோக்கள்தான் அடுத்த பெரிய சங்கதி. இந்த வசதியை அளிக்கும் விர்ச்சுவல் ரியாலிட்டி சாதனங்களும் வரிசையாக அறிமுகமாகிக்கொண்டிருக்கின்றன. ஆனால், இந்த வகை உள்ளடக்கத்தைக் காண்பதில் சிக்கல் இல்லாமல் இல்லை. இந்த வீடியோக்களை டவுன்லோடு செய்த பிறகு, அவற்றைக் காண தனியே பிளேயரைப் பயன்படுத்த வேண்டும். இந்தக் குறையைப் போக்கும் வகையில், முன்னணி பிரவுசர்களில் ஒன்றான ஓபரா, விர்ச்சுவல் ரியாலிட்டி காட்சிகளுக்கான பிளேயர் வசதியையும் தனது பிரவுசரில் இணைத்துள்ளது. இதனால், பயனாளிகள் வி.ஆர். சாதனங்களை மாட்டிக்கொண்டு எந்தச் சிக்கலும் இல்லாமல் மெய்நிகர் உலகில் மூழ்கலாம். இதற்கெனத் தனி பிளேயரும் தேவையில்லை.