பொருள் புதுசு: 3டி கேக்

பொருள் புதுசு: 3டி கேக்
Updated on
2 min read

உக்ரைனைச் சேர்ந்த தினாரா காஸ்கோ என்பவர் 3டி பிரிண்டிங் தொழில்நுட்பம் மூலம் கேக் தயாரிக்கிறார். கம்ப்யூட்டரில் மாடலை உருவாக்கிக் கொண்டு தான் வடிவமைத்த கருவியைக் கொண்டு கேக்குகளை உருவாக்குகிறார்.

ஸ்மார்ட் எல்இடி

ledjpg100 

சாலையில் பாதசாரிகள் கடக்குமிடத்தை ஸ்மார்ட்டாக உருவாக்குகிறது லண்டன். சிக்னல் விழுந்ததும் பாதசாரிகள், சைக்கிள்களுக்கான ஜிப்ரா கோடுகள் சாலையில் எல்இடியாக ஒளிரும். சிக்னலுக்கு பின் சாலையில் அடையாளம் இருக்காது.

பக்கவாட்டில் சுழலும் சக்கரம்

சுமை தூக்கும் இயந்திரங்களைத் தயாரிக்கும் துருக்கியைச் சேர்ந்த செக்கிட்லி நிறுவனம் பக்கவாட்டுகளில் எளிதாக சுழலும் டயர்களை உருவாக்கியுள்ளது. இதனால் வாகனத்தை திருப்பாமலேயே பக்கவாட்டில் செல்ல முடியும்

போர் ரோபோ

போர்களில் பயன்படுத்தப்படும் ஏவுகணைகளை ராணுவர வீரர்கள்தான் இயக்கமுடியும். தற்போது இதற்கு பதிலாக ரோபோ ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைன் திட்டமிட்டுள்ளது. ஏவுகணைகளில் வெடிபொருட்களையும் குண்டுகளையும் நிரப்பிவிட்டால் தானாக முன்னேறி இலக்கை தாக்கும் அளவுக்கு இந்த ரோபோ ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் இந்த ரோபோக்கள் போர்களில் பயன்படுத்தப்பட இருக்கின்றன. 5 கிலோமீட்டர் வரை உள்ள இலக்கை இந்த ரோபோ ஏவுகணைகள் தாக்குகின்றன. மணிக்கு 38 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது.

புதிய விமான இறக்கை

பொதுவாக விமானங்களில் பயணிக்கும் போது இறக்கைகளின் மூலமாகத்தான் அதிகம் சத்தம் வரும். இதனால் ஒருவித இரைச்சலுடன் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்படும். இந்த இரைச்சலை குறைப்பதற்காக புதிய வகை விமான இறக்கையை நாசா கண்டறிந்துள்ளது. விமான தரையிறங்கும் போதும் மேல் எழும்பும் போது தற்போது ஏற்படும் இரைச்சலை விட 30 சதவீதம் குறைவாக இந்த புதிய இறக்கைகள் ஏற்படுத்தும் என்று நாசா தெரிவித்துள்ளது. விரைவில் பயன்பாட்டுக்கும் வர இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in