பெண்கள் எடுத்து வைக்கும் சிறு அடியும் சமூகத்துக்கு அவசியம்: கலந்துரையாடல் நிகழ்வில் எழுத்தாளர் பாரதி கருத்து

ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற ‘தி ஸ்டோன் இன் தி பேக்யார்டு’ நூல் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்ற மூத்த பத்திரிகையாளர் கவிதா முரளிதரன், நூலை மொழி பெயர்த்த ஸ்ரீராமன், எழுத்தாளர் கே.பாரதி. | படம்: எஸ்.சத்தியசீலன் |

ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற ‘தி ஸ்டோன் இன் தி பேக்யார்டு’ நூல் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்ற மூத்த பத்திரிகையாளர் கவிதா முரளிதரன், நூலை மொழி பெயர்த்த ஸ்ரீராமன், எழுத்தாளர் கே.பாரதி. | படம்: எஸ்.சத்தியசீலன் |

Updated on: 
1 min read

சென்னை: ரத்னா புக்ஸ் பதிப்​பகம், மெட்​ராஸ் புக் கிளப் சார்​பில் எழுத்​தாளர் கே.​பாரதி எழு​திய ‘ரங்​க​ நாயகி’ என்ற தமிழ் நாவலின் ஆங்​கில மொழிபெயர்ப்​பான ‘தி ஸ்டோன் இன் தி பேக்​யார்டு - தி ஸ்ரீராஜபுரம் சாகா’​வின் அறி​முகம் மற்​றும் கலந்​துரை​யாடல் நிகழ்ச்​சி, சென்னை ஆழ்​வார்​பேட்​டை​யில் நேற்று நடை​பெற்​றது.

இந்​நூலின் மொழிபெயர்ப்​பாள​ரான பேராசிரியர் டி. ஸ்ரீராமன், எழுத்​தாளர் கே.​பாரதி ஆகியோ​ருடன் நாவல் குறித்​தும், அதில் இடம்​பெற்​றுள்ள கதா​பாத்​திரங்​கள் குறித்​தும் மூத்த பத்​திரி​கை​யாள​ரும், எழுத்​தாள​ரு​மான கவிதா முரளிதரன் கலந்​துரை​யாடி​னார்.

அப்​போது எழுத்​தாளர் கே.​பாரதி பேசும்​போது, “பெண்​கள் ஒரு வீட்​டின் இன்​றியமை​யாத அங்​கம். ஆனால் பல நூற்​றாண்​டு​களாக அவர்​கள் மவுன​மாக்​கப்​பட்டே வரு​கின்​றனர். அவர்​களது குரல் எங்​கும் ஒலிக்​காமல், எவராலும் கேட்​கப்​ப​டா​மலும் உள்​ளது.

இதை கருத்​தில் கொண்டே எனது நாவலுக்கு இந்த தலைப்பை வைப்​பது பொருத்​த​மாக இருக்​கும் என முடிவு செய்​தேன். இந்த நாவல் முழு​வதும் ‘கல்’ ஒன்று மவுன சாட்​சி​யாக பயணிக்​கிறது. இது பெண்​களின் நிலையை விளக்​கும் ஒரு மிகச்​சிறந்த உரு​வக​மாகும்.

வரலாற்​றில் வீட்​டை​விட்டு வெளி​யேறி பொது வாழ்​வில் புரட்சி செய்த பெண்​களைப் போல​வே, குடும்​பத்​துக்​குள் பெண்​கள் எடுத்து வைக்​கும் ஒவ்​வொரு சிறிய அடி​யும் சமூக முன்​னேற்​றத்​துக்கு மிக​வும் அவசி​ய​மானது; முக்​கிய​மானது.

ஏனெனில், அந்த மாற்​றங்​கள் மிக​வும் நிலை​யானவை. அத்​தகைய தொடர்ச்​சி​யான நிலைத்​தன்​மை​தான் பெண்​களை இன்​றைய வளர்ச்சி நிலைக்கு கொண்டு வந்து சேர்த்​துள்​ளது” என்​றார்.

மொழிபெயர்ப்​பாளர் டி.ஸ்ரீராமன் பேசி​யபோது, “ஒரு படைப்பை மொழிபெயர்ப்​பாளரிடம் ஒப்​படைப்​பது என்​பது, தான் பாச​மாக வளர்த்த மகளை மற்​றொரு குடும்​பத்​துக்கு திரு​மணம் செய்து கொடுப்​பது போன்றது” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in