“எனது கைக்கடிகாரத்தின் விலை ரூ.5,500 தான்” - அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

“எனது கைக்கடிகாரத்தின் விலை ரூ.5,500 தான்” - அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
Updated on: 
1 min read

சென்னை: ‘எனது கையில் அணிந்திருக்கும் கடிகாரத்தின் விலை சுமார் ரூ.5,500 மட்டுமே. உண்மைக்குப் புறம்பான அவதூறுகளிலும் தனிப்பட்ட இழிவுபடுத்தல்களிலும் ஈடுபடுவோரை சட்டரீதியாக எதிர்கொள்வேன்’ என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘எனது கையில் அணிந்திருக்கும் கடிகாரத்தின் விலை சுமார் ரூ.5,500 மட்டுமே. கருத்து தெரிவிப்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் திட்டமிட்டு நிறம், உடை, அணிகலன் குறித்து பொய் பரப்பி இழிவுபடுத்துவது ஏற்புடையதல்ல.

உண்மைக்குப் புறம்பான அவதூறுகளிலும் தனிப்பட்ட இழிவுபடுத்தல்களிலும் ஈடுபடும் ஃபேக் நியூஸ் பேக்டரிகள் கூட்டத்தை சட்டரீதியாக எதிர்கொள்வேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அமைச்சர் ராஜ்மோகன் அணிந்துள்ள கைக்கடிகாரத்தின் விலை சுமார் 20 முதல் 40 லட்சம் ரூபாய் அளவுக்கு இருக்கும் என்றும், அது மிகவும் விலை உயர்ந்த ரோலக்ஸ் வாட்ச் வகையை சேர்ந்தது என்றும் சமூக வலைதளங்களில் இன்று தகவல்கள் வேகமாக பரவின. அதற்கு பதிலளிக்கும் விதமாக இப்போது அமைச்சர் ராஜ்மோகன் இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார்.

“எனது கைக்கடிகாரத்தின் விலை ரூ.5,500 தான்” - அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
“தவெக எம்எல்ஏக்களை எனக்கு தெரியாது” - கார்த்தி சிதம்பரம் எம்.பி

X