

சென்னை: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சி சார்பில் 200 வார்டுகளிலும் அனைத்து சாலைகள் மற்றும் பொது இடங்களில் முறையான உரிமம் இன்றி அமைக்கப்பட்ட விளம்பரப் பலகைகள், அனுமதிக்கப்பட்ட அளவீடுகளுக்கு மாறாக உள்ளவை மற்றும் நடைமுறையில் உள்ள விதிகளுக்குட்பட்டு அமைக்கப்படாத விளம்பரப் பலகைகளை கண்டறிந்து அகற்றும் தீவிரப் பணி இன்றும், நாளையும் மேற்கொள்ளப்பட உள்ளது.
மாநகராட்சியின் சட்ட நடவடிக்கைகளைத் தவிர்க்க, விளம்பரதாரர்களும், முகமைகளும் அனுமதியற்ற விளம்பரப் பலகைகளைத் தாமாகவே முன்வந்து அகற்ற வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.