

சென்னை: வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் பிரதான குடிநீர் குழாய் மாற்றியமைக்கும் அனைத்து பணிகள் நிறைவடைந்து, சீரான குடிநீர் விநியோகம் நேற்று தொடங்கியது.
இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக, வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் பிரதான குடிநீர் குழாய் மாற்றியமைக்கும் பணிகள் கடந்த நவ.11 முதல் 15-ம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டது.
இதனால், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர்) மற்றும் மண்டலம் 13 (அடையாறு) ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்பட்ட குடிநீர் குறைந்த அளவில் விநியோகிக்கபட்டது.
பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதற்காக ஏற்கெனவே அப்பகுதிகளில் இயங்கி வரும் குடிநீர் லாரிகள் மட்டுமல்லாமல் கூடுதலாக லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, நேற்று அதிகாலை முதல் சீரான குடிநீர் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.
சீரான குடிநீர் விநியோகம் மேற்கொள்வதற்காக ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த குடிநீர் அளவினை விட தற்போது கூடுதலாக குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.