பாம்பனில் உள்ள பழைய ரயில் பாலத்தை அகற்றும் பணிகள் தொடக்கம்

4 மாதங்களில் முடிக்க இலக்கு
சாலைப் பாலத்துக்கும், புதிய ரயில் பாலத்துக்கும் நடுவே உள்ள பழைய பாம்பன் ரயில் பாலம் அகற்றப்பட உள்ளது.

சாலைப் பாலத்துக்கும், புதிய ரயில் பாலத்துக்கும் நடுவே உள்ள பழைய பாம்பன் ரயில் பாலம் அகற்றப்பட உள்ளது.

Updated on
1 min read

ராமேசுவரம்: ​பாம்​பன் பழைய ரயில் பாலத்தை அகற்​றும் பணி​கள் தொடங்​கின. 4 மாதங்​களில் முடிக்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

தமிழகத்​தின் மண்​டபம் நிலப்​பரப்​பை​யும், ராமேசுவரம் தீவை​யும் இணைப்​ப​தில் பாம்​பன் ரயில் பால​மும், இந்​திரா காந்தி சாலைப் பால​மும் முக்​கியப் பங்கு வகிக்​கின்​றன. 1914-ல் பாம்​பன் ரயில் பாலம் (செஷர்ஸ் பாலம்) திறக்​கப்​பட்​டு, போக்​கு​வரத்து தொடங்​கியது. நாட்​டில் கடலின் நடுவே அமைக்​கப்​பட்ட முதல் பாலம் இது​வாகும்.

இந்​தப் பாலத்​தில் கப்​பல்​கள் செல்​வதற்​காக நடு​வில் தண்​ட​வாளங்​களுக்கு இடையே தூக்​குப் பாலம் அமைக்​கப்​பட்​டிருந்​ததே இதன் சிறப்​பாகும். இந்​தப் பாலம் 1964-ம் ஆண்டு புயலில் சேதமடைந்து மறுசீரமைப்பு செய்​யப்​பட்​டு, பயன்​பாட்​டுக்கு கொண்​டு​வரப்​பட்​டது.

நூற்​றாண்​டு​களைக் கடந்த இந்​தப் பாலத்​தில் அடிக்​கடி தொழில்​நுட்​பக் கோளாறு ஏற்​பட்​ட​தால், புதிய பாலத்​துக்கு 2019-ல் அடிக்​கல் நாட்​டப்​பட்​டு, 2020-ல் பணி​கள் தொடங்​கப்​பட்​டன. கடந்த ஆண்டு ஏப்​.6-ம் தேதி பிரதமர் மோடி​யால் புதிய பாம்​பன் ரயில் பாலம் திறந்து வைக்​கப்​பட்​டது.

கப்​பல்​கள், படகு​கள் செல்​வதற்​காக புதிய ரயில் பாலத்​தின் நடுவே உள்ள செங்​குத்​துத் தூக்​குப் பாலம் ஒவ்​வொரு முறை தூக்​கப்​படும்​போதும், பழைய ரயில் தூக்​குப்​பால​மும் திறக்​கப்பட வேண்​டியதுள்​ளது. இதனால், பழைய ரயில் பாலத்தை அகற்ற ரயில்வே நிர்​வாகம் முன்​வந்​தது.

கடந்த ஆகஸ்ட் மாதம் ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் (ஆர்​விஎன்​எல்) என்ற ரயில் உட்​கட்​டமைப்பு திட்​டங்​களை செயல்​படுத்​தும் மத்​திய அரசின் நிறு​வனம், பழைய பாம்​பன் பாலத்தை அகற்ற ஒப்​பந்​தப்​புள்ளி கோரி அறி​விப்பு வெளி​யிட்​டது.

அந்த அறி​விப்​பில் 2.3 கி.மீ. நீளம் கொண்ட இப்​பாலத்​தின் நடு​வில் உள்ள தூக்​குப்​பாலம் மற்​றும் கர்​டர் பாலம், தண்​ட​வாளங்​களை ரூ.2.53 கோடி​யில் அகற்ற ஒப்​பந்​தம் கோரப்​பட்​டிருந்​தது. இந்​நிலை​யில், ஒப்​பந்​தப்​புள்ளி வழங்​கப்​பட்டு பழைய பாம்​பன் ரயில் பாலத்தை அகற்​றும் பணி​கள் தொடங்​கி​யுள்​ளன. நான்கு மாதங்​களுக்​குள் பணி​களை முடிக்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p>சாலைப் பாலத்துக்கும், புதிய ரயில் பாலத்துக்கும் நடுவே உள்ள பழைய பாம்பன் ரயில் பாலம் அகற்றப்பட உள்ளது.</p></div>
18 சேவைகள் அடங்கிய ‘ஸ்பிரின்ட் 1’ - பதிவுத் துறையின்கீழ் புதிய திட்டம் தொடக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in