வெற்றிப் பயணம் திட்டத்தால் அதிகரிக்கும் கூட்டம்: பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்வோர் அவதி

அரியலூர் பேருந்து நிலையத்தில் வெற்றிப் பயணம் திட்ட பேருந்தில் ஏற நேற்று குவிந்த பெண்கள்.

அரியலூர் பேருந்து நிலையத்தில் வெற்றிப் பயணம் திட்ட பேருந்தில் ஏற நேற்று குவிந்த பெண்கள்.

Updated on: 
1 min read

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் வெற்றிப் பயணம் திட்டத்தால், அரசுப் பேருந்துகளில் கூட்டம் அதிகரித்து, வழக்கமாக பணிக்குச் செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பெரிதும் அவதியடைகின்றனர்.

தமிழகத்தில் உள்ள அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கும் வகையில் வெற்றிப் பயணம் திட்டத்தை முதல்வர் விஜய் அக்.2-ம் தேதி தொடங்கிவைத்தார். இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் வெற்றிப்பயணம் திட்டம் நடைமுறைக்கு வந்ததில் இருந்து தனியார் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் குறைந்து, அரசுப் பேருந்துகளில் அதிகரித்தது.

அரியலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்குகளை வெட்டும் பணிக்குச் செல்லும் பெண்கள் சுமை ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்கை வாடகைக்கு எடுத்துச் சென்று. வேலை முடிந்ததும். அதே வாகனத்தில் திரும்புவதை வழக்கமாக வைத்திருந்தனர்.

ஆனால், தற்போது வெற்றிப் பயணம் திட்டத்தால் அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணித்து களை வெட்டும் பணிகளில் ஈடுபடுகின்றனர். இதுபோன்று. கட்டிட பணி, கடைகள் என பல்வேறு வேலைகளுக்குச் செல்லும் பெண்களும் தற்போது தனியார் பேருந்துகள் உட்பட பிற வாகனங்களை தவிர்த்துவிட்டு, அரசுப் பேருந்துகளில் பயணிக்கின்றனர். இதனால், காலை 8 மணிக்கு எந்த வழித்தடத்தில் பார்த்தாலும் அரசுப் பேருந்துகளில் பெண் பயணிகளின் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது.

இதன் காரணமாக, வழக்கமாக அந்தப் பேருந்துகளில் பயணித்து வந்த மற்ற பணிகளுக்குச் செல்லும் ஆண்கள், பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் என அனைவரும் கூட்ட நெருக்கடியில் சிக்கி, அதிக அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து செந்துறையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கூறியபோது, "5 ஆண்டுகளுக்கும் மேலாக அரியலூரில் உள்ள கடையில் கூலி வேலை செய்து வருகிறேன். தினமும் காலை 8 மணிக்கு செந்துறையில் இருந்து அரியலூருக்கு அரசுப் பேருந்தில் செல்வது வழக்கம். ஆனால் தற்போது அந்தப் பேருந்து வெற்றிப் பயணம் திட்டத்துக்கு மாற்றப்பட்டுவிட்டதால், பெண்கள் கூட்டம் அதிகரித்து, ஏறக்கூட முடிவதில்லை.

தாமதமாக வேலைக்குச் செல்லும் பெண்கள் கூட, தற்போது முன்கூட்டியே வரும் இந்தப் பேகுந்தில் ஏறி பயணிக்கின்றனர். அந்த நேரத்தில் தனியார் பேருந்துகளும் இல்லாத நிலையில், ஏற்கெனவே இந்தப் பேருந்தில் தினமும் பயணித்து வந்த என்னைப் போன்றோர் மிகவும் அவதியுறுகிறோம். எனவே, காலை, மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்" என்றார்.

<div class="paragraphs"><p>அரியலூர் பேருந்து நிலையத்தில் வெற்றிப் பயணம் திட்ட பேருந்தில் ஏற நேற்று குவிந்த பெண்கள்.</p></div>
புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் என்.ஆர். காங்கிரஸ் அமோக வெற்றி!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in