கவின் கொலை வழக்கில் பெண்ணின் பெற்றோர் விடுவிப்பு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

கவின் கொலை வழக்கில் பெண்ணின் பெற்றோர் விடுவிப்பு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
Updated on: 
1 min read

சென்னை/புதுடெல்லி: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ், காதல் விவகாரத்தில் கடந்த 2025 ஜூலை மாதம் 27-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

சாதிய நோக்கத்தோடு இந்தக் கொலை நடைபெற்றதாகக் கூறப்பட்ட நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, பெண்ணின் சகோதரர் சுர்ஜித்தை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

மேற்கொண்டு விசாரணை நடத்தியதில் காவல்துறை உதவி ஆய்வாளர்களான பெண்ணின் தாய் கிருஷ்ணகுமாரி, பெண்ணின் தந்தை சரவணன் மற்றும் உறவினர் ஜெயபால் ஆகியோரும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்ததையடுத்து, அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே, கைது செய்யப்பட்ட சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோருக்கு எதிராக தகுந்த ஆதாரங்கள் இல்லை என கூறி, அவர்கள் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

இந்தச் சூழலில், அந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது, இந்த மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கவின் கொலை வழக்கில் பெண்ணின் பெற்றோர் விடுவிப்பு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்து நிதி பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ளார்: அன்பில் மகேஸ் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையில் அரசு தரப்பில் குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in