ராகுல் காந்தி மீது பெண் பத்திரிகையாளர் புகார்

ராகுல் காந்தி மீது பெண் பத்திரிகையாளர் புகார்
Updated on: 
1 min read

புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டத்தின்போது, உச்ச நீதிமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தன் கையைப் பிடித்து இழுத்ததுடன், ஆக்ரோஷமாக கீழே தள்ளி விட்டதாக ரிச்சா பராஷர் என்கிற பத்திரிகையாளர் குற்றம் சாட்டினார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை காங்கிரஸ் திட்டவட்டமாக மறுத்தது.

இந்த நிலையில், 3 மாத கர்ப்பிணியான ரிச்சா பராஷர் நேற்று டெல்லியின் துணை காவல் ஆணையரை நேரில் சந்தித்து ராகுல் காந்தி மீது புகார் அளித்தார். அதில், “நான் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் கேள்விகள் கேட்டேன். திடீரென அவர் என் கையைப் பிடித்து இழுத்து, நுழைவாயிலை நோக்கித் தள்ளினார். நான் நிலை தடுமாறி கீழே விழுந்தேன்.

எனக்கு உடல் மற்றும் மன ரீதியான காயத்தை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்தை விளைவித்த ராகுல் காந்தி மீது இந்தப் புகாரின் பேரில் தாமதமின்றி முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி மீது பெண் பத்திரிகையாளர் புகார்
சிறார்கள் இணையத்தை பயன்படுத்த தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in