டிட்வா புயல் பாதிப்பு: கும்பகோணம் அருகே சுவர் இடிந்து விழுந்து இளம்பெண் உயிரிழப்பு

டிட்வா புயல் பாதிப்பு: கும்பகோணம் அருகே சுவர் இடிந்து விழுந்து இளம்பெண் உயிரிழப்பு
Updated on
1 min read

கும்பகோணம்: டிட்வா புயல் பாதிப்பு காரணமாக கும்பகோணம் அருகே வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் இளம்பெண் உயிரிழந்தார்

கும்பகோணம் வட்டம், ஆலமன்குறிச்சி உடையார் தெருவைச் சேர்ந்தவர் முத்துவேல் (56). இவரது மனைவி கீதா (45). இந்த தம்பதியினருக்கு கனிமொழி (21) மற்றும் ரேணுகா (20) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் டிட்வா புயல் பாதிப்பு காரணமாக நேற்று (நவ.29) இரவு முத்துவேலின் வீட்டுச் சுவர் திடிரென இடிந்து விழுந்தது. இதில் வீட்டிலிருந்த 4 பேரும் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்தனர்.

இதையறிந்த அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், பலத்த காயமடைந்த 2 மகள்களை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். இதில் 2-வது மகள் ரேணுகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

<div class="paragraphs"><p> கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வரும் தம்பதியினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த&nbsp;எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன்</p></div>

கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வரும் தம்பதியினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன்

இது தொடர்பாக சுவாமிமலை போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையறிந்த கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வரும் தம்பதியினரை பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தார்.

டிட்வா புயல் பாதிப்பு: கும்பகோணம் அருகே சுவர் இடிந்து விழுந்து இளம்பெண் உயிரிழப்பு
டிட்வா புயல் தாக்கம்: வயல்கள், குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் - டெல்டா மாவட்டங்களின் நிலவரம் என்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in