தவெகவுக்கு மோதிரம் சின்னம்?

தவெகவுக்கு மோதிரம் சின்னம்?
Updated on
1 min read

சென்னை: நடிகர் விஜய்​யின் தவெக கட்​சி, மோதிரம் சின்​னத்​தில் போட்​டி​யிட இருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன. தமிழக சட்​டப்​பேரவை தேர்​தல் நெருங்​கிவரும் சூழலில் முன்​னேற்​பாடு​களை தவெக கட்சி தீவிரப்​படுத்தி வரு​கிறது.

தேர்​தலில் போட்​டி​யிடு​வதற்கு பொது​வான சின்​னம் வழங்​கக் கோரி கடந்த மாதம் தேர்​தல் ஆணை​யத்​தில் தவெக மனு அளித்​தது.

அதில் ஆட்​டோ, கிரிக்​கெட் பேட், விசில் உட்பட 10 சின்​னங்​கள் இடம்​பெற்​றிருந்​தன. அதிலிருந்து ஒரு சின்​னம் இறுதி செய்​யப்​பட்​டுள்​ள​தாக​வும், விரை​வில் அறி​விப்பு வரலாம் எனவும் கூறப்​படு​கிறது.

அதன்​படி தவெக​வின் சின்​னம் 4 தமிழ் எழுத்​துகளை கொண்​ட​தாக இருக்​கலாம் என்​றும், அது மோதிர​மாக இருக்​கக்​கூடும் எனவும் தகவல்​கள் கிடைத்​துள்​ளன.

இதுகுறித்து தவெக வட்​டாரங்​களில் விசா​ரித்​த​போது, “கட்​சி​யின் சின்​னம் பெண்​களை எளி​தில் ஈர்க்​கும் வித​மாக மக்​களிடம் சுலப​மாக கொண்டு சேர்க்​கும்​படி இருக்க வேண்​டுமென விஜய் விரும்​பு​கிறார்.

அந்​தவகை​யில் மோதிரம் சின்​னம் தனித்​து​வ​மான பிராண்​டாக மாறும். சின்​னம் குறித்த அறி​விப்​புக்​காக கட்​சி​யின் தொண்​டர்​கள் ஆவலுடன் காத்​திருக்​கின்​றனர்​” என்​றனர்​.

தவெகவுக்கு மோதிரம் சின்னம்?
நடிகர் ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது: சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in