வாசுதேவநல்லூர் தொகுதியில் வாகை சூடப்போவது யார்?

வாசுதேவநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் ஈ.ராஜா பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

வாசுதேவநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் ஈ.ராஜா பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

Updated on
2 min read

தென்காசி: வாசுதேவநல்லூர் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் கரும்பு, எலுமிச்சை விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. அதிகமான கிராமங்களை உள்ளடக்கிய இந்த பகுதியில் பீடி தொழிலிலும் ஏராளமான பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தொகுதியில் உள்ள புளியங்குடி எலுமிச்சை சந்தை தமிழகம் முழுவதும் பிரபலமானது. எலுமிச்சை மூலம் மதிப்பு கூட்டு தொழில்களை உருவாக்க வேண்டும், வாசுதேவநல்லூரில் சர்க்கரை ஆலையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கைகளாக உள்ளன.

2,27,369 வாக்காளர்கள்

கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி இத்தொகுதியில் 1,10,960 ஆண்கள், 1,16,396 பெண்கள், 13 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,27,369 வாக்காளர்கள் உள்ளனர்.

பாஜக வேட்பாளர் ஆனந்தன் அய்யாசாமி  ஆதரவு திரட்டினார்.

பாஜக வேட்பாளர் ஆனந்தன் அய்யாசாமி ஆதரவு திரட்டினார்.

மொத்தம் 315 வாக்குச்சாவடிகள் உள்ளன. வாசுதேவநல்லூர் தொகுதியில் திமுக சார்பில் ஈ.ராஜா எம்எல்ஏ, பாஜக சார்பில் ஆனந்தன் அய்யாசாமி, தவெக சார்பில் அமுதராணி, நாதக சார்பில் இசை மதிவாணன் மற்றும் பல்வேறு கட்சிகள், சுயேச்சைகள் உட்பட 18 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

நாதக வேட்பாளர் இசை மதிவாணன் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.

நாதக வேட்பாளர் இசை மதிவாணன் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.

சங்கரன்கோவில் தொகுதி திமுக வேட்பாளர் ஈ.ராஜா இந்த முறை வாசுதேவநல்லூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர், திமுக அரசின் 5 ஆண்டு கால சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்கிறார். வாசுதேவநல்லூரில் மூடப்பட்ட சர்க்கரை ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

செண்பகவல்லி தடுப்பணை பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி ஆதரவு திரட்டி வருகிறார். பாஜக வேட்பாளர் ஆனந்தன் அய்யாசாமி, கடந்த சில ஆண்டுகளாகவே தேர்தலுக்கான வேலைகளை தொடங்கிவிட்டார் என்று கூறலாம். தொகுதியில் பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளார்.

செண்பகவல்லி தடுப்பணை நீர்ப்பாசன பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். விவசாய விளைபொருட்களுக்கு குளிர்பதன கிடங்கு, ஏற்றுமதி மையம் அமைக்கப்படும், போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை கூறி பிரச்சாரம் செய்து வருகிறார்.

தவெக வேட்பாளர் அமுதராணி வாக்கு சேகரித்தார்.

தவெக வேட்பாளர் அமுதராணி வாக்கு சேகரித்தார்.

தவெக வேட்பாளர் அமுதராணி, தேர்தல் அறிக்கையில் விஜய் அறிவித்த திட்டங்களை கூறி, வாக்கு சேகரித்து வருகிறார். 3 மாதத்தில் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படும், செண்பகவல்லி அணை உடைப்பு சரி செய்யப்படும், வேலைவாய்ப்பு அதிகரி்க்கப்படும் என்று கூறி பிரச்சாரம் செய்து வருகிறார்.

நாதக வேட்பாளர் இசை மதிவாணன், கனிமவள கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும், மதுபான கடைகள் மூடப்படும் என்று கூறியும், நாம் தமிழர் கட்சி அறிவித்த திட்டங்களை விளக்கிக் கூறியும் வாக்கு சேகரித்து வருகிறார்.

வழக்கமான வாக்குறுதி

வாசுதேவநல்லூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள செண்பகவல்லி தடுப்பணை உடைப்பை சரி செய்து, பாசன நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பது ஒவ்வொரு தேர்தலின்போதும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் கூறும் வாக்குறுதியாக உள்ளது. இந்த முறையும் வேட்பாளர்கள் தரப்பில் இருந்து வழக்கம்போல் இந்த வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழக, கேரள அரசுகள் இணைந்து இந்த பிரச்சினைக்கு இந்த முறையாவது தீர்வு ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் வழக்கம்போல் வேட் பாளர்களின் பிரச்சாரங்களை கவனித்து வருகின்றனர்.

வாசுதேவநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் ஈ.ராஜா பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

ஏப்.20 வரை தமிழக உள் மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பநிலை உயர வாய்ப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in