

திமுக வேட்பாளராக களமிறங்க எண்ணி, அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் கடந்த 17-ம் தேதி முதல் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தி வருகிறார்.
கடந்த 23-ம் தேதி கடலூர் மேற்கு மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் தொகுதியில் இருந்து 24 பேர் இந்த நேர் காணலில் பங்கேற்றனர். கலந்து கொள்வதற்கு முன், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயிலில் சீட் கட்டி வேண்டிக் கொண்டனர். முன்னாள் எம்எல்ஏ-வான வி.டி.கலைச் செல்வனிடம் இதுபற்றி கேட்டதற்கு, “100 சதவீதம் எங்களுக்குத்தான்” என்றார்.
விருத்தாசலம் தெற்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகனிடம் பேசியபோது, “எம்எல்ஏ ஆகிறோமா இல்லையா என்பது இரண்டாவது விஷயம்.. தலைவரை நேரில் சந்தித்து ஒன் டூ ஒன் பேசும் வாய்ப்பு கிடைக்குதே!” என்றார்.
மருத்துவர் அணியைச் சேர்ந்த முருகதாஸிடம் பேசியபோது, “விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தால் வெற்றிபெற்று விடலாம், நான் வெற்றி பெற்று வதை விட, திமுக மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும் என்பது தான் என் கனவு” என்றார்.
இப்படியே கூறி வந்தவர் களிடம் நேர்காணலில் என்னதான் நடந்தது என்று கேட்டோம். “முதலில் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம். தொகுதி நிலவரத்தை கேட்டார்.
இந்தமுறை விருத்தாசலத்தை கூட்டணிக்கு ஒதுக்கக் கூடாது என்று அனைவருமே வலியுறுத்தி னோம். கூட்டணிக்கு ஒதுக்கி னால் வெற்றி பெறுவது சிரமம் என்று தெரிவித்தோம்.
விருத்தாசலத்தில், திமுக போட்டியிட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இடைமறித்த ஆர்.எஸ்.பாரதி, ‘2016-ல் போட்டியிட்டோமே’ என்று கேட்டார். அப்போது வேட்பாளர் மாற்றம் போன்ற சில சச்சரவு ஏற்பட்டதால் வாய்ப்பு கை நழுவி போனதை குறிப்பிட்டோம்.
அனைத்தையும் கேட்டுக்கொண்ட முதல்வர், “எனக்கும் நமது கட்சித்தான் போட்டியிட வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.எனவே உங்களில் எவரேனும் வேட்பாளர் ஆகும்பட்சத்தில் அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
அதே நேரத்தில் கூட்டணியில் கேட்டால் ஒதுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் பட்சத்தில் ஒத்துழைத்து, அவர்களையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.
இவ்வாறாக நேர்காணலுக்கு சென்று வந்தவர்கள் கூற, “நாங்க சிட்டிங் எம்எல்ஏ எங்களுக் குத்தான் சீட்” என்று காங்கிர ஸார் தெரிவிக்கின்றனர். “யார் வேணாலும் என்ன வேணாலும் சொல்லட்டும், விருத்தாசலம் எங்களது கோட்டை.
எங்கள் அண்ணி கேட்டிருக்கிறார். தளபதி ஒதுக்குவார். இத்தொகுதியில் தேமுதிக 3-வது முறையாக வெற்றிபெற்று புதிய சாதனை படைக்கும்” என்கிறார் மாவட்டத் துணைச் செயலாளரான ராஜ வன்னியன்.