மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்குவது எப்போது? - நிதி அமைச்சர் மரிய வில்சன் பதில்

அமைச்சர் மரிய வில்சன்

அமைச்சர் மரிய வில்சன்

Updated on
1 min read

மயிலாடுதுறை: தமிழகத்​தில் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்​கு​வது எப்​போது? என நிதி​யமைச்​சர் மரிய வில்​சன் பதில் அளித்​துள்​ளார்.

வேளாங்​கண்ணி பேராலய ஆண்​டுப் பெரு​விழா நாளை (ஆக.29) கொடியேற்​றத்​துடன் தொடங்கி நடை​பெற உள்​ளது. இதில் பங்​கேற்​ப​தற்​காக தமிழகம் உள்​ளிட்ட பல்​வேறு மாநிலங்​களில் இருந்து ஏராள​மான பக்​தர்​கள் பாத​யாத்​திரை​யாக சென்று கொண்​டிருக்​கின்​றனர். அந்த வகை​யில், நிதி அமைச்​சர் மரிய வில்​சன் புதுச்​சேரி​யில் இருந்து கடந்த 25-ம் தேதி வேளாங்​கண்​ணிக்கு பாத யாத்​திரை​யாக புறப்​பட்டுச் சென்று கொண்​டுள்​ளார்.

சீர்​காழி பகு​திக்கு நேற்று வந்த அவர் செய்​தி​யாளர்​களிடம் தெரி​வித்​த​தாவது: தமிழகத்தில் அரசுத் துறை​களில் அதிக அளவில் லஞ்​சம் தவிர்க்​கப்​பட்​டுள்​ளதை மக்​கள் வரவேற்​கின்​றனர். சட்​டப்​பேரவை நிகழ்​வு​கள் நேரடி​யாக ஒளிபரப்பு செய்​யப்​படு​வதை மக்​கள் ஆர்​வத்​துடன் பார்த்து வரு​கின்​றனர். பள்​ளிக்கல்​வித் துறை​யில் கடந்த காலங்​களில் லஞ்​சம் பெற்று உரிமம் வழங்​கப்​பட்​ட​தாக கூறப்​படும் விவ​காரத்​தில், நான் சாட்​சி​யாக உள்​ளேன் என்​று​தான் சொல்லி இருக்​கிறேன். அது தவறாக புரிந்​து​கொள்​ளப்​பட்​டுள்​ளது.

மகளிருக்கு மாதந்​தோறும் ரூ.2,500 வழங்​கப்​படும் என்ற தவெக தேர்​தல் வாக்​குறு​தியை நிறைவேற்​று​வதற்​காக, ஜிஎஸ்​டி, பத்​திரப்​ப​திவு உள்​ளிட்ட பல்​வேறு துறை​களில் வரிவிதிப்பு அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. அதன் மூலம் வரக்​கூடிய வரு​வாயைக் கொண்டு இந்​தத் தொகை உயர்த்தி வழங்​கப்​படும். கடந்த திமுக ஆட்​சி​யில் 28 மாதங்​களுக்கு பின்​னர்​தான் மகளிருக்கு ரூ.1,000 வழங்​கப்​பட்​டது என்​றார்.

<div class="paragraphs"><p>அமைச்சர் மரிய வில்சன்</p></div>
அடுத்த பிரதமர் யார்? - 3-வது இடத்தில் விஜய்: கருத்துக்கணிப்பில் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in