தமிழகத்தில் ராகுல் பிரச்சாரம் தாமதமாவது ஏன்? - கிரிஷ் சோடங்கர் விளக்கம்

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

Updated on
1 min read

சென்னை: ​நா​டாளு​மன்ற கூட்​டத்​தொடர் மற்​றும் அனைத்​துக்​கட்சி கூட்​டங்​கள் நடை​பெற்று வரு​வ​தால் ராகுல், பிரி​யங்கா ஆகியோரின் தமிழக வரு​கை​யில் தாமதம் ஏற்​பட்​டுள்​ளது என காங்​கிரஸ் மேலிடப் பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கர் தெரி​வித்​தார்.

சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் காங்​கிரஸ் போட்​டி​யிடும் 28 தொகு​தி​களுக்​கான மேலிடப் பார்​வை​யாளர்​களின் ஆலோ​சனைக் கூட்​டம் சென்னை சத்​தி​யமூர்த்தி பவனில் நேற்று நடை​பெற்​றது.

தமிழக காங்​கிரஸ் கமிட்​டித் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை தலை​மை​யில் நடை​பெற்ற கூட்​டத்​தில், அகில இந்​திய காங்​கிரஸ் மூத்த பார்​வை​யாளர்​கள் முகுல் வாஸ்​னிக், உத்​தம்​கு​மார் ரெட்​டி, குவாசி நிசா​மு​தின், தமிழகப் பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கர், ஏஐசிசி செய​லா​ளர்​கள் சூரஜ் எம்​.என்​.ஹெக்​டே, நிவே​தித் ஆல்வா உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

பிரச்​சா​ரப் பாடல்: அதைத்​தொடர்ந்​து, இளைய கம்​பன் எழு​தி, ஸ்டீபன் ராயல் இசையமைப்​பில் உரு​வான 'தாய்க்​கும் தாயான கட்​சி' என்ற காங்​கிரஸ் கொள்கை முழக்​கப் பிரச்​சா​ரப் பாடல் வெளி​யிடப்​பட்​டது.

கூட்​டத்​துக்​குப் பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கிரிஷ் சோடங்கர் கூறிய​தாவது: நாடாளு​மன்ற கூட்​டத்​தொடர் மற்​றும் அனைத்​துக்​கட்சி கூட்​டங்​கள் நடை​பெற்று வரு​வ​தால் மல்​லி​கார்​ஜுன கார்​கே, ராகுல் காந்தி மற்​றும் பிரி​யங்கா காந்தி ஆகியோரின் தமிழக வரு​கை​யில் தாமதம் ஏற்​பட்​டுள்​ளது. இன்​னும் இரண்டு அல்​லது மூன்று நாட்​களில் தமிழகத்​தில் அவர்​கள் பிரச்​சா​ரத்​தைத் தொடங்​கு​வார்​கள்.

ஒரே மேடை​யில்.. புதுச்​சேரி பிரச்​சா​ரத்​தின்​போது ராகுல் காந்தி கேரளா செல்ல வேண்​டி​யிருந்​த​தா​லும், தமிழக முதல்​வர் ஸ்டா​லின் முன்​கூட்​டியே திட்​ட​மிட்ட நிகழ்ச்​சிகளில் பங்​கேற்க வேண்​டி​யிருந்​த​தா​லும் அவர்​கள் ஒரே மேடை​யில் தோன்​ற​வில்​லை. இதை வைத்து சில கட்​சிகள் கூட்​ட​ணி​யில் குழப்​பத்தை ஏற்​படுத்த முயல்​கின்​றன.

ஆனால், மிக விரை​வில் ராகுல் காந்​தி​யும், முதல்​வர் ஸ்டா​லினும் இணைந்து பிரம்​மாண்​டப் பிரச்​சா​ரத்தை மேற்​கொள்​வார்​கள். காங்​கிரஸ் பேரியக்​கத்​தின் உண்​மை​யான தொண்​டர்​கள் எப்​போதும் காங்​கிரஸில்​தான் இருப்​பார்​கள். அவர்​கள் வெளியே செல்​ல மாட்​டார்​கள்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

<div class="paragraphs"><p>ராகுல் காந்தி</p></div>
“என்டிஏ வந்தால் மீண்டும் தமிழகத்தை இருண்ட காலத்துக்குள் தள்ளிவிடுவர்” - முதல்வர் ஸ்டாலின்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in