தமிழகத்தில் மார்ச் 28 முதல் ஏப்.1 வரை லேசான மழை வாய்ப்பு

தமிழகத்தில் மார்ச் 28 முதல் ஏப்.1 வரை லேசான மழை வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் மார்ச் 28 முதல் ஏப்.1-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். மார்ச் 28 முதல் 30-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மார்ச் 31, ஏப்.1 ஆகிய தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் மார்ச் 30-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் வழக்கத்தை விட 3 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 78 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மார்ச் 28 முதல் ஏப்.1 வரை லேசான மழை வாய்ப்பு
‘அம்மா’ வளர்த்த சேகர்பாபு இப்போது ‘அப்பா’வின் அடிமை: தமிழிசை விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in