மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மார்ச் 5 வரை லேசான மழைக்கு வாய்ப்பு

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மார்ச் 5 வரை லேசான மழைக்கு வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நாளை (பிப்.28) முதல் மார்ச் 5-ம் தேதி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (பிப்.28) முதல் மார்ச் 5-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

இதர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும். தமிழக கடலோர பகுதிகளில் நாளை ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, அதிகபட்சமாக தென்காசி மாவட்டம் ஆயிக்குடியில் 7 செமீ, குண்டாறு செங்கோட்டை, ராமநதி அணைப் பகுதி, கோவை மாவட்டம் உபாசி, வால்பாறையில் தலா 4 செமீ, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டம், மாம்பழத்துறையாறு, பாலமோர், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் தலா 3 மழை பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மார்ச் 5 வரை லேசான மழைக்கு வாய்ப்பு
“பாஜகவின் பழிவாங்கும் அரசியலை படுதோல்வி காணச் செய்துள்ளார் கேஜ்ரிவால்!” - மு.வீரபாண்டியன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in