“குப்பையிலிருந்து மின்சாரம் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்” - சவுமியா அன்புமணி உறுதி

 சேலத்தில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் அமைக்கப்பட உள்ள இடத்தை பார்வையிட்ட பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி.

சேலத்தில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் அமைக்கப்பட உள்ள இடத்தை பார்வையிட்ட பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி.

Updated on: 
1 min read

சேலம்: வெள்​ளக்​கல்​பட்​டி​யில் குப்​பையில் இருந்து தயாரிக்​கும் திட்​டத்​தைச் செயல்​படுத்த அனுமதிக்க மாட்​டோம் என்று பாமக எம்​எல்ஏ சவுமியா அன்​புமணி தெரி​வித்​தார்.

சேலம் அருகே வெள்​ளக்​கல்​பட்​டி​யில் 90 ஏக்​கர் பரப்​பளவில் குப்​பையை எரித்து மின்​சா​ரம் தயாரிக்​கும் திட்​டத்​தைச் செயல்​படுத்த உள்​ள​தாக தமிழக அரசு அறி​வித்​துள்​ளது. இத்​திட்​டத்​துக்கு பல்​வேறு தரப்​பினரும் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில், திட்​டம் அமைய​வுள்ள இடத்தை பாமக எம்​எல்ஏ சவுமியா அன்​புமணி நேற்று பார்​வை​யிட்டு, பொது​மக்​களிடம் கருத்​துகளை கேட்​டறிந்​தார்.

பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: சேலத்​தில் 90 ஏக்​கர் நிலத்தை கடந்த ஆட்​சி​யிலேயே தேர்வு செய்​து​விட்​டனர். இந்த திட்​டம் சுற்​றுச்​சூழலுக்கு மிகவும் ஆபத்​தானது. காற்​றாலை, சூரிய ஒளி மின்​சா​ரம் போன்​றவை சுற்​றுச்​சூழலுக்கு உகந்த திட்​டங்​கள். ஆனால், குப்​பையை எரித்து மின்​சா​ரம் தயாரிக்​கும்​போது புற்​றுநோயை ஏற்​படுத்​தும் ரசாயனங்​கள் வெளியாகி, மக்​களின் உடல்​நலத்தை பாதிக்​கும்.

இந்த திட்​டத்​தைச் செயல்​படுத்த அனுமதிக்க மாட்​டோம். திட்​டம் கைவிடப்​படும்​வரை சட்​டரீதி​யான அழுத்​தங்​களைக் கொடுப்​போம். குப்​பையில் இருந்து மின்​சா​ரம் தயாரிக்​கும் திட்​டம் உலக அளவில் தோல்​வியடைந்த திட்​ட​மாகும். எனவே, இத்​திட்​டத்​தைக் கொண்​டுவரக் கூடாது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

<div class="paragraphs"><p> சேலத்தில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் அமைக்கப்பட உள்ள இடத்தை பார்வையிட்ட பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி. </p></div>
தேனி, திண்டுக்கல், மதுரைக்கு ரெட் அலர்ட்; தஞ்சை, கோவை உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு மிக கனமழை வாய்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in