“எதிர்க்கட்சிகளே இல்லாத நிலையை ஏற்படுத்துவோம்” - முதல்வர் விஜய் மேடையில் அமைச்சர் ரமேஷ் பேச்சு

அமைச்சர் ரமேஷ்

அமைச்சர் ரமேஷ்

Updated on
1 min read

திருச்சி: “தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிளே இல்லாத நிலையை ஏற்படுத்துவோம்” என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் பேசினார்.

திருச்சியில் நடைபெற்ற முதல்வர் விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பேசும்ப்போது, “திருச்சியை தங்கள் கோட்டை என கூறிக் கொண்டிருந்த கட்சிகள் அனைத்தும் இன்று வாய்மூடி கொண்டன. சின்னப் பசங்க என்ன செய்து விடப் போகிறார்கள் என்று அவர்கள் தப்பு கணக்கு போட்டு விட்டனர்.

மக்களுக்காக மக்களின் நலனுக்காக உழைக்கும் ஒருவரை மக்கள் என்றும் அரசனாக பார்ப்பார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக முதல்வர் விஜய் இன்று மக்கள் ஆதரவோடு வெற்றி பெற்று மக்களுடன் நிற்கிறார்.

இன்னும் இந்த சின்னப் பசங்க என்ன செய்துவிடப் போகிறார்கள் என்று எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ளும் வகையில், அறுதி பெரும்பான்மையை நிரூபித்து தவெக தலைவர் விஜய் நல்லாட்சி புரிவார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியே இல்லாத நிலையை ஏற்படுத்துவோம்” என்றார்.

<div class="paragraphs"><p>அமைச்சர் ரமேஷ்</p></div>
“பயிர்க் கடன் தள்ளுபடியில் முதல்வர் விஜய் செய்தது பெரும் துரோகம்” - நயினார் நாகேந்திரன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in