

கும்பகோணம்: “வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். காவிரியில் விரைவில் நீர் திறக்கப்படும்,” என வேளாண்மை துறை அமைச்சர் வினோத் தெரிவித்தார்.
கும்பகோணம் வட்டம், கோவிலாச்சேரி, மிழலையில் சி, டி பிரிவாய்க்கால் தூர்வாரும் பணியை வேளாண்மை துறை அமைச்சர் வினோத் இன்று தொடங்கி வைத்தார். வேளாண்மை பொறியியல் துறை சார்பில் கோவிலாச்சேரி மிழலையில் 6.9. கி,மீ., கல்லூரில் 14.6 கி.மீ., திருநல்லூரில் 2.6 கி.மீ., நீரத்தநல்லூரில் 2.5 கி.மீ என மொத்தம் 26.65 கி.மீ., தூரத்திற்கு ரூ.9.25 லட்சம் மதிப்பில் சி.டி. பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரும் பணி தொடங்கியது.
மிழலையில் நடைபெற்ற தொடக்க விழாவில் வேளாண்மை துறை அமைச்சர் வினோத் பங்கேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஜூன் 12-ம் தேதி மேட்டூரில் அணை திறக்கப்படுமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘விரைவில் திறக்கப்படும்” என்றார்.
பின்னர், வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்’ என தெரிவித்தார். தொடர்ந்து, அரசலாற்றில் 3-ம் கட்டமாக 4.30 கி.மீ. தூரத்தில் நடைபெறும் தூர்வாரும் பணியை வேளாண்மை துறை அமைச்சர் வினோத் தொடங்கி வைத்தார்.