வருமானவரி அதிகாரிகளின் கார்களில் வாக்காளர்களுக்கு வழங்க பணம் கடத்தலா? - குற்றச்சாட்டின் பேரில் போலீஸார் விசாரணை

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தேதி நெருங்கி வரு​கிறது. இந்​தச் சூழலில் வாக்​காளர்​களுக்கு அரசி​யல் கட்​சி​யினர்பணப்​பட்​டு​வாடா செய்​வதைத் தடுக்க தேர்​தல் ஆணை​யம் பல்​வேறு தொடர் நடவடிக்​கை​களில் ஈடு​பட்​டுள்​ளது.

ஆனாலும் சில அரசி​யல் கட்​சிகள், பல்​வேறு நூதன வழிகளில் வாக்​காளர்​களுக்கு பணம் கொடுத்து வாக்கை கவர முயன்று வரு​வ​தாகக் கூறப்​படு​கிறது.

இதற்​கிடையே, வரு​மானவரித் துறை அதி​காரி​கள் பயன்​படுத்​தும் கார்​கள் மூலம் வாக்​காளர்​களுக்கு கொடுப்​ப​தற்​காக பணம் கடத்​திச் செல்​லப்​படு​வ​தாக தகவல் அறி​யும் உரிமை செயற்​பாட்​டாளர் ஒரு​வர், ஆயிரம் விளக்கு தொகுதி தேர்​தல் நடத்​தும் அதி​காரி மற்​றும் பாண்டி பஜார் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​துள்​ளார்.

அந்த புகாரில், “வரு​மானவரித் துறை மற்​றும் வரு​மானவரித் துறை புல​னாய்​வுப் பிரிவுக்​காக அதி​காரி​கள் கார்​களை வாடகைக்கு எடுத்து பயன்​படுத்தி வரு​கின்​றனர். அவர்​கள் மஞ்​சள் வாகன பதிவெண் கொண்ட கார்​களை எடுக்​காமல், வெள்ளை பதிவெண் கொண்ட கார்​களை எடுத்​துள்​ளனர்.

மேலும் அந்த கார்​களில் விதி​களை மீறி வருமானவரித் துறை என்ற பெயர் பலகையை வைத்​தும் விதி​மீறல்​களில் ஈடு​பட்​டுள்​ளனர். தற்​போது தேர்​தல் சமயத்​தில் இது​போன்ற கார்​கள் மூலம் சட்​ட​விரோத​மாக பணம் கொண்டு செல்​லப்​படு​கிறது.

அந்த கார்​களின் ஓட்​டுநர்​கள் தங்​களை உயர் அதி​காரி​களைப் போல் காண்​பித்​துக் கொண்டு தேர்​தலில் சட்​ட​விரோதப் பணத்தை விநி​யோகிப்​ப​தில் ஈடு​பட்​டுள்​ளனர்.

இந்த தனி​யார் கார்​களை உடனடி​யாக தேர்​தல் அதி​காரி​கள் பறி​முதல் செய்ய வேண்​டும். அதி​காரி​களுக்கு தெரி​யாமல் இது நடை​பெற வாய்ப்​பில்​லை. எனவே, வரு​மானவரித் துறை அதி​காரி​களின் கார்​களை​யும் தேர்​தல் அதி​காரி​கள் சோதனை​யிட வேண்​டும்.

இந்த விவ​காரத்​தில் தேர்​தல் ஆணை​யம் தலை​யிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இந்த புகார் குறித்து தேர்​தல் அதி​காரி​களும், போலீ​ஸாரும் தனித்​தனி​யாக விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்​.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
தமிழகத்தில் நடப்பாண்டில் நாய்க்கடியால் 2 லட்சம் பேர் பாதிப்பு: ரேபிஸ் தொற்றால் 13 பேர் உயிரிழப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in