வஉசி பிறந்த நாளை வழக்கறிஞர்கள் தினமாக அறிவிக்க வேண்டும்: அரசுக்கு கொள்ளுப் பேத்தி கோரிக்கை

வஉசி பிறந்த நாளை வழக்கறிஞர்கள் தினமாக அறிவிக்க வேண்டும்: அரசுக்கு கொள்ளுப் பேத்தி கோரிக்கை
Updated on
1 min read

கோவில்பட்டி: சுதந்​திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்​பர​னாரின் பிறந்த நாளை வழக்​கறிஞர் தின​மாக அறிவிக்க வேண்​டும் என அவரது கொள்​ளுப்​பேத்தி செல்வி கோரிக்கை விடுத்​துள்​ளார்.

சுதந்​திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்​பர​னாரின் 155-வது பிறந்த நாளை முன்​னிட்டு கோவில்​பட்​டி​யில் உள்ள அவரது கொள்​ளுப்​பேத்​தி​யும், கோவில்​பட்டி கல்வி மாவட்ட அலு​வலரு​மான உ.செல்வி தனது வீட்​டில், நேற்று காலை வ.உ.சி.​யின் உரு​வப்​படத்​துக்கு மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​தி​னார்.

தொடர்ந்து அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறும்போது, “கப்​பலோட்​டிய தமிழன் வ.உ.சிதம்​பர​னாரின் பிறந்த நாளை வழக்​கறிஞர் தின​மாக அறிவிக்க வேண்​டும். இது எங்​கள் குடும்​பம் மற்​றும் வழக்​கறிஞர்​களின் நீண்ட கால கோரிக்​கை​யாகும். அவர் பிறந்த இல்​லம் உள்ள ஓட்​டப்​பி​டாரத்​தில் வஉசிக்கு பிரம்​மாண்ட மணிமண்​டபம் அமைக்க வேண்​டும்.

சுதந்​திர போராட்ட தியாகி​களை கொச்​சைப்​படுத்​தும் வித​மாக பேசுபவர்​கள் மீது கடுமை​யாக நடவடிக்கை மேற்​கொள்ள வேண்​டும். இதுசம்​பந்​த​மாக புதிய சட்​டம் இயற்ற வேண்​டும் என அனைத்து தியாகி​களின் வாரிசு​தா​ரர்​களின் சார்பில் முதல்​வருக்கு கோரிக்கை விடுக்​கிறேன். இவ்வாறு கூறினார். அப்​போது வழக்​கறிஞர் போ.​முரு​கானந்​தம், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்​தாளர் சோ.தர்​மன், ரோட்​டரி சங்க தலை​வர் முத்​து​முரு​கன் உள்​ளிட்​டோர் உடனிருந்​தனர்.

வஉசி பிறந்த நாளை வழக்கறிஞர்கள் தினமாக அறிவிக்க வேண்டும்: அரசுக்கு கொள்ளுப் பேத்தி கோரிக்கை
“இந்தியாவின் வளர்ச்சியை சிலரால் சகித்துக்கொள்ள முடியவில்லை” - பிரதமர் மோடி சாடல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in