

வேலூர்: க்யூ.எஸ். உலக பல்கலைக்கழகங்களின் தர வரிசைப்பட்டிய லில், நிலைத்தன்மை பிரிவில் வேலூர் விஐடி பல்கலை. உலகளவில் 293-ம் இடமும், இந்திய அளவில் 5-ம் இடமும் பிடித்துள்ளது.
இதுகுறித்து, விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: உலக பல்கலைக்கழகங் களின் நிலைத்தன்மை பிரிவுக்கான தரவரிசைப் பட்டியலை க்யூ.எஸ். அமைப்பு வெளியிட்டுள்ளது.
நிலைத்தன்மை பிரிவில் சுற்றுச்சூழல் மற்றும் சமூக தாக்கம், நிர்வாகம் என்ற மூன்று அளவுகோலில் தரவரிசை அளவிடப்படுகிறது. க்யூ.எஸ். உலக பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலில் நிலைத்தன்மை பிரிவில் ஒட்டுமொத்தமாக 81.2 மதிப்பெண்களை பெற்று விஐடி பல்கலைக்கழகம், கடந்த ஆண்டைவிட 59 இடங்கள் முன்னேறி உலகளவில் 293 -ம் இடத்தையும், இந்திய அளவில் 5–ம் இடத்தையும் பிடித்துள்ளது.
2025-ம் ஆண்டில் உலகளவில் 352-ம் இடமும், இந்திய அளவில் 7-ம் இடமும் பிடித்து சிறப்பு சேர்த்தது குறிப்பிடத்தக்கது. 2027 பதிப்பில் க்யூ.எஸ். உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் 2,000 பல்கலைக்கழகங்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.
இதில், விஐடி பல்கலைஉலகின் முதல் 300 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளது. விஐடி வளாகத்தில் சோலார் கார் வாகன நிறுத்தும் இடத்தில் 441 கிலோவாட் சோலார் மின்தகடு கூரைகட்டமைப்பு ஏற்படுத்தி ஆண்டு தோறும் 650 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதனால் ஆண்டுக்கு 470 டன் கரியமில வாயு வெளியேற்றம் தடுக்கப்படுகிறது. ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
விடுதிகளில் சேகரிக்கப்படும் உணவுக் கழிவுகள் மறுசுழற்சி செய்து 200 கி.வா.மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் 15 டன் மரக்கழிவுகளும் எரிசக்தியாக மாற்றப்படுகிறது. விஐடி வளாகம் முழுவதும் பசுமையாக இருப்பதால் பறவைகளின் புகலிடமாகத் திகழ்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.