25 பேர் உயிரிழந்த விவகாரம் - விருதுநகர் பட்டாசு ஆலை உரிமையாளர் நீதிமன்றத்தில் சரண்

கோப்புப் படம் 

கோப்புப் படம் 

Updated on
1 min read

விருதுநகர்: விருதுநகர் அருகே 25 பேர் உயிரிழந்த விவகாரத்தில், பட்டாசு ஆலை உரிமையாளர் விருதுநகர் நீதிமன்றத்தில் இன்று காலை சரணடைந்தார்.

விருதுநகர் அருகே உள்ள கட்டனார்பட்டியில் வனஜா பட்டாசு ஆலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட வெடிவிபத்தில் 25 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த ஆலையின் உரிமையாளர் முத்துமாணிக்கம், இவரது மனைவி ஈஸ்வரி ஆகியோர் மீது வச்ச காரப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக இருந்த இருவரையும் தேடி வந்தனர்.

இந்நிலையில், தேடப்பட்ட முத்து மாணிக்கம் விருதுநகர் முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் சரணடைந்தனர்.

இதனிடையே, இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத்தின் மேலாண்மை இயக்குநர் கோவிந்தராவ்  என்பவரை சிறப்பு விசாரணை அதிகாரியாக தமிழக அரசு நியமித்திருப்பது குறிப்பிடத்தகக்து.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்&nbsp;</p></div>
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெண்கள், குழந்தைகள், இளைஞர்களை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது: அன்புமணி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in