முதல்வர் விஜய் கர்நாடகம் செல்வதற்கு காதர் மொகிதீன், ஜி.கே.வாசன் வரவேற்பு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய தேசிய தலைவர் காதர் மொகிதீன். உடன் அமைச்சா் ஷாஜகான் உள்ளிட்டோர். படம்: ர.செல்வமுத்துகுமார்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய தேசிய தலைவர் காதர் மொகிதீன். உடன் அமைச்சா் ஷாஜகான் உள்ளிட்டோர். படம்: ர.செல்வமுத்துகுமார்

Updated on
1 min read

திருச்சி / மதுரை: ​முதல்வர் விஜய் கர்நாடகம் செல்வதற்கு ஐயுஎம்எல் தேசிய தலைவர் காதர் மொகிதீன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வரவேற்பு தெரி​வித்துள்ளனர்.

திருச்​சி​யில் காதர் மொகிதீன் செய்​தி​யாளர்​களிடம் கூறியது: உள்​ளாட்​சித் தேர்​தல், சட்​டப்​பேர​வைத் தேர்​தல், நாடாளு​மன்​றத் தேர்​தல் என அனைத்து தேர்​தல்​களி​லும் தவெக கூட்​ட​ணி​யிலேயே ஐயுஎம்​எல் தொடர்ந்து பயணிக்​கும். நீட் தேர்​வுக்கு எதி​ராக இளைஞர்​கள் நடத்​திய போராட்​டம் டெல்​லியை குலுக்​கி​விட்​டது. நீட் தேர்வை முற்​றி​லும் ஒழித்​து, கல்​வியை மாநில கல்வி பட்​டியலில் சேர்த்​தால் முழு​மை​யான தீர்வு கிடைக்​கும்.

காவிரி நீர், மேகே​தாட்டு விவ​காரம் தொடர்​பாக கர்​நாடக முதல்​வருடன் பேச்​சு​வார்த்தை நடத்த தமிழக முதல்​வர் விஜய் கர்​நாடகம் செல்​வது ஒரு அற்​புத​மான முடிவு. இதனால் தமிழகத்​துக்கு சாதக​மான முடிவு தான் ஏற்​படும். இவ்​வாறு அவர் கூறி​னார். இதே​போல் தமாகா தலை​வர் ஜி.கே.​வாசனும் வரவேற்​றுள்​ளார்.

மதுரை​யில் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: விவ​சா​யிகளுக்கு தண்​ணீர் பெற்​றுத்​தரும் நிலை தவெக அரசுக்கு ஏற்​பட்​டுள்​ளது. டெல்டா விவ​சா​யிகளுக்கு நம்​பிக்கை அளிக்​கும் வகை​யில் தமிழக முதல்​வரின் செயல்​பாடு​கள் அமைந்​துள்​ளன.

மத்​திய மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதுதல், சட்ட ரீதி​யாக போராடு​வது என்​பதை கடந்​து, 12 ஆண்​டு​களுக்கு பின்பு தமிழகத்​திலிருந்து ஒரு முதல்​வர், கர்​நாடகா மாநிலம் சென்று அங்​குள்ள முதல்​வரை சந்​தித்து காவிரி நீர் உரிமையை நிலை​நாட்ட நினைப்​பது வரவேற்​கத்​தக்​கது. அவரது முயற்சி வெற்றிபெற வேண்​டும் என வாழ்த்​துக்​கிறோம். எங்​களுக்கு காங்​கிரஸ்கட்​சி​யோடு எவ்​வித கோப​மும் கிடை​யாது. காம​ராஜர் ஆட்சி அமைப்​பது​தான் காங்​கிரஸ், தமா​கா​வின் நோக்​கம்.

<div class="paragraphs"><p>இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய தேசிய தலைவர் காதர் மொகிதீன். உடன் அமைச்சா் ஷாஜகான் உள்ளிட்டோர். படம்: ர.செல்வமுத்துகுமார்</p></div>
“சோனம் வாங்சுக்கின் தியாகம் வரலாற்றில் நிலைத்து நிற்கும்” - சிஜேபி புகழாரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in