காமராஜரின் ஆட்சியைப் போல விஜய்யின் ஆட்சி நேர்மையாக இருக்க வேண்டும்: ப.சிதம்பரம் விருப்பம்

மதுரையில் தனியார் கல்லூரியில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர்.

மதுரையில் தனியார் கல்லூரியில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர்.

Updated on
1 min read

மதுரை: முதல்வர் விஜய் தலை​மையி​லான ஆட்சி காம​ராஜரின் ஆட்​சி​யைப்​போல் நேர்​மை​யாக இருக்க வேண்​டும் என முன்​னாள் மத்​திய அமைச்​சர் ப. சிதம்​பரம் தெரி​வித்​தார்.

முன்​னாள் முதல்​வர் காம​ராஜரின் பிறந்த நாளை​யொட்டி மதுரை நாகமலை புதுக்​கோட்டையில் உள்ள தனியார் கல்​லூரி​யில் ‘லஞ்​சம் தவிர், நெஞ்​சம் நிமிர்’ என்ற தலைப்​பில் சிறப்பு நிகழ்ச்சி நடை​பெற்​றது. இதில் முன்​னாள் மத்​திய அமைச்​சர் ப.சிதம்​பரம், தமிழக காங்​கிரஸ் தலை​வர் மாணிக்​கம் தாகூர், முன்​னாள் மாநிலத் தலை​வர் திரு​நாவுக்​கரசர் ஆகியோர் சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்​றனர்.

விழா​வில் ப.சிதம்​பரம் பேசி​ய​தாவது: தமிழ்​நாட்​டில் காம​ராஜரின் 9 ஆண்​டு​கால ஆட்​சி​யில் லஞ்​சம் என்​பதே கிடை​யாது. புதி​தாகப் பொறுப்​பேற்ற தவெக ஆட்​சி​யிலும் லஞ்​சத்​தைத் தவிர்க்​கும் முயற்சி நடக்​கிறது. பத்​திரப்​ப​திவு அலு​வல​கத்​தில் லஞ்​சம் தவிர்க்​கப்​பட்​டிருக்​கிறது. ஆசிரியர் பணி நியமனம், இடமாறு​தல் உள்​ளிட்​ட​வற்​றில் லஞ்​சம் பெறப்​படு​வ​தில்​லை.

இதே​போல், இன்​னும் பல துறைகளில் லஞ்​சத்தை தவிர்க்க வேண்​டும். இதை முதல்​வர் விஜய்​யின் ஆட்சி செய்​யும். தமிழகத்​தில் மீண்​டும் லஞ்​சம் தவிர்த்த காம​ராஜரின் ஆட்​சி​யாக அடுத்த ஐந்​தாண்​டு​கள் இருக்க வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார். பின்னர், தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்​கம் தாகூர் பேசுகை​யில், ‘காம​ராஜர் மாடல் அரசை யாராலும் கொண்​டுவர முடிய​வில்​லை. தற்​போது முதல்​வர் விஜய் அதைத் தொடங்கி இருக்​கிறார். நேர்​மை​யான ஆட்சியை வழங்க முயற்​சிக்​கிறார்’ என்​றார்.

<div class="paragraphs"><p>மதுரையில் தனியார் கல்லூரியில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர்.</p></div>
உண்ணாவிரதப் போராட்டத்தை அரசு ‘அணுகும்’ முறை - சட்டம் சொல்வது என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in