அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகாத விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கர் | கோப்புப்படம்
விஜயபாஸ்கர் | கோப்புப்படம்
Updated on: 
1 min read

சென்னை: அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது, குட்கா முறைகேடு தொடர்பாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, 2021-ல் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அவருக்குச் சொந்த மான இடத்தில் சோதனை நடத்தினர்.

அமலாக்கத் துறையும் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவியிடம் விசாரணை நடத்தியது. இந்நிலையில், ரூ.35.79 கோடி சொத்து குவிப்பு வழக்கின் விசாரணைக்காக நேற்று ஆஜராக இருவருக்கும் மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், சென்னை அமலாக்கத் துறை அலுவலகத் தில் விஜயபாஸ்கர் நேற்று ஆஜராகவில்லை.

இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோரில் யாராவது ஒருவர்விசாரணைக்காக ஆஜரா வார்கள் என எதிர்ப்பார்த்தோம். ஆனால், யாரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த வழக்கில் அடுத்தகட்டமாக அவர்கள் மீது மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறோம்’’ என்றனர்.

விஜயபாஸ்கர் | கோப்புப்படம்
கோவை பெரியார் அறிவுலக நூல் கொள்முதலில் ஊழல்: திமுக மீது முதல்வர் விஜய் குற்றச்சாட்டு

X