“விஜய் வாக்குகளைப் பிரிப்பார்; பழனிசாமி முதல்வராவார்” - நயினார் நாகேந்திரன் பேட்டி

“விஜய் வாக்குகளைப் பிரிப்பார்; பழனிசாமி முதல்வராவார்” - நயினார் நாகேந்திரன் பேட்டி
Updated on
1 min read

நெல்லை: “விஜய் அனைத்து தொகுதிகளிலும் வாக்குகளை பிரிப்பார். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆவார்” என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

பாஜக மாநிலத் தலைவரும் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான நயினார் நாகேந்திரன் தனது சொந்த ஊரான திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள மகாராஜா நகர் ஜெயேந்திர பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “திருநெல்வேலி மற்றும் சாத்தூர் தொகுதி இரண்டும் எனது கண்கள் ஒரு நல்ல அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதற்கு மக்களுக்கு ஒரு வாய்ப்பு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கிடைத்துள்ளது.

அந்த வாய்ப்பாக இந்த நாள் அமைந்துள்ளது. இந்த நாளில் அனைத்து வாக்காள பெருமக்களும் நாட்டின் நலன் கருதி, நாட்டு மக்களுடைய நலன் கருதி, எதிர்கால சந்ததியின் நலன் கருதி, தமிழகத்தில் போதைப் பொருட்கள் இல்லாமல் இருக்க வேண்டி எதிர்கால சந்ததிகள் நல்ல முறையில் வாழ வழிகாட்டும் நாளாக விலைமதிப்பு இல்லாத வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும்.

7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் வாக்குச்சாவடிகளில் 500-க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிக்கிறார்கள். அவர்கள் முதல்வராக யார் வர வேண்டும் எனத் தீர்மானிப்பார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளாக முதல்வராக இருந்த ஸ்டாலின் நல்லாட்சியை தரவில்லை எனக் கண்கூடாக தெரிகிறது. பெண்கள் கண்ணீர் வடிக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது . தமிழகம் மீண்டு வரவேண்டும் .

இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறை பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உலகத் தலைவர்களின் மிகப்பெரிய நண்பனாக மோடி உள்ளார். பாஜக, அதிமுக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கூட்டணியில் இருந்து தேர்தலை சந்தித்தது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என எங்கள் கூட்டணி போட்டியிடுகிறது .

சாத்தூர் தொகுதி மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பிரகாசமாக வெற்றி வாய்ப்புள்ளது. எல்லா மக்களும் ஆரவாரத்துடன் மகிழ்ச்சியாக வாக்களித்து வருகிறார்கள், மிகப்பெரிய எழுச்சி கிடைத்துள்ளது. விஜய்யால் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது அனைத்து தொகுதிகளிலும் வாக்குகளைப் பிரிப்பார். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆவார்” என தெரிவித்தார்

“விஜய் வாக்குகளைப் பிரிப்பார்; பழனிசாமி முதல்வராவார்” - நயினார் நாகேந்திரன் பேட்டி
“தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது ஜனநாயக துரோகம்” - வாக்களித்த பின் சீமான் கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in