கொளத்தூர் தொகுதி முடிவைப் பார்த்தும் திமுக பாடம் கற்றுக்கொள்ளவில்லை: உதயநிதிக்கு முதல்வர் விஜய் பதில்

கொளத்தூர் தொகுதி முடிவைப் பார்த்தும் திமுக பாடம் கற்றுக்கொள்ளவில்லை: உதயநிதிக்கு முதல்வர் விஜய் பதில்
Updated on
1 min read

சென்னை: ‘நம் வெற்​றி​யின் வீச்சு எப்​படி இருந்​தது என்​ப​தைக் கொளத்தூர் உள்​ளிட்ட தொகு​தி​களில் பார்த்​தும் கூடவா புரிய​வில்​லை அதி​காரத்துடன் ஆட்​டம் போட்ட 15 அமைச்​சர்​களின் தோல்​வியைப் பார்த்த பிறகும் திமுக பாடம் கற்​றுக்​கொள்​ள​வில்​லை’ என உதயநி​திக்கு தமிழக முதல்​வர் விஜய் பதிலடி கொடுத்​துள்​ளார்.

சட்​டப்​பேர​வை​யில் நேற்று பேசிய எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநி​தி, தவெக​வுக்கு எதி​ராக 65 சதவீதம் பேர் வாக்​களித்​துள்​ளனர் என்று கூறி​னார். இதற்கு பதிலளிக்​கும் வகை​யில் முதல்​வர் விஜய் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: சட்​டப்பேரவையில் நடை​பெற்ற நம்​பிக்கை கோரும் தீர்​மானத்​தில், மக்​கள் அரசு 144 உறுப்​பினர்​களின் ஆதர​வுடன் வெற்றி பெற்​றுள்​ளது.

திமுக போன்ற கட்​சிகள் தவெக-​வின் பெரும்​பான்மை குறித்​துப் பேசி வரு​கின்​றன. ஆனால், யதார்த்​தம் என்​னவென்​றால், கூட்​டணி இல்​லாமல் தனித்​துப் போட்​டி​யிட்ட தவெக 34.92% வாக்​கு​களைப் பெற்​றுள்​ளது. தனிப்​பட்ட முறை​யில் திமுக பெற்ற வாக்​கு​கள் வெறும் 24.19% மட்​டுமே.

திமுகவை விட தவெக 52,97,065 வாக்​கு​கள் அதி​கம் பெற்​றுள்​ளது என்​ப​தைத் தேர்​தல் ஆணை​யப் புள்​ளி​விவரங்​கள் உறு​திப்​படுத்​துகின்​றன. தவெக-வை 3.21 கோடி மக்​கள் நிராகரித்​து​விட்​ட​தாகக் கூறும் திமுக, அதே கணக்​குப்​படி 3.68 கோடி மக்​களால் நிராகரிக்​கப்​பட்ட கட்​சி​தான்.

தமிழகத்​தின் 76% மக்​களால் நிராகரிக்​கப்​பட்ட ஒரு கட்​சி, 35% மக்​களின் ஆதர​வுடன் வெற்றி பெற்ற எங்​களைப் பார்த்து ஏளன​மாகப் பேசுவது நகைப்​புக்​குரியது. மதச்​சார்​பற்ற நிலைப்​பாட்​டில் நாம் உறு​தி​யாக இருப்​ப​தால்​தான் காங்​கிரஸ், விசிக, இடது​சா​ரி​கள் மற்​றும் முஸ்​லிம் லீக் கட்​சிகள் நம்மை ஆதரித்​தன.

சட்​டப்​பேரவை நிகழ்​வு​களை இருட்​டடிப்பு செய்​யாமல் நேரடி ஒளிபரப்பு செய்​ததன் மூலம் எதை​யும் மறைக்​காத அரசு என்​பதை நிரூபித்​துள்​ளோம்.

நம் வெற்​றி​யின் வீச்சு எப்​படி இருந்​தது என்​ப​தைக் கொளத்​தூர் உள்​ளிட்ட தொகு​தி​களில் பார்த்​தும் கூடவா புரிய​வில்​லை? அதி​காரத்தை வைத்​து ஆட்​டம்போட்ட 15 அமைச்​சர்​களின் தோல்​வியைப் பார்த்த பிறகும் திமுக பாடம் கற்​றுக்​கொள்​ள​வில்​லை.

1999-ல் பாஜக​வுடன் எக்​ஸ்​ சேஞ்ச் அரசி​யல் செய்த திமுக, எங்​களைப் பார்த்து விமர்​சிப்​பது வேடிக்​கை. நாங்​கள் ‘சேஞ்ச்’ மற்​றும் ‘சேலஞ்ச்’ இரண்​டை​யும் நம்பி அரசி​யலுக்கு வந்​தவர்​கள். எங்​கள் அரசை ‘புஷ்பா அரசு’ என ஏளனம் செய்​பவர்​கள், தோல்வி பயத்​தில் பொறாமை​யால் புகை கக்​கு​கிறார்​கள்.

மேஜிக்​கல் நம்​பர் இல்லை என்று சொல்​பவர்​கள், எங்​கள் அரசு செய்​யப்​போகும் ‘மேஜிக்’ மற்​றும் ‘மி​ராக்​கிள்’ சாதனை​களை இனிமேல் தான் பார்க்​கப் ​போகிறார்​கள். ஆர்ப்​பாட்​ட​மின்றிஅமை​தி​யாக மக்​கள் நலப்​பணி​களைச் செய்து காட்​டு​வோம்.

மக்​களே... தோல்​வி​யில் மூழ்​கி​யுள்​ளவர்​கள் நம் மீது சேற்றை வாரி இறைக்​கட்​டும். நாம் மக்​கள் நலன், மதச்​சார்​பற்ற சமூகநீ​திக் கொள்​கை​யில் உறு​தி​யாக இருந்​து சாதனை படைப்​போம்​ என அவர் தெரிவித்துள்ளார்.

கொளத்தூர் தொகுதி முடிவைப் பார்த்தும் திமுக பாடம் கற்றுக்கொள்ளவில்லை: உதயநிதிக்கு முதல்வர் விஜய் பதில்
ஜோதிடர் ரிக்கி ராதனுக்கு வழங்கப்பட்ட அரசுப் பதவி உத்தரவு ரத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in