

செங்கல்பட்டு: தவெக தலைவர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு விசாரணை ஜூன் 15-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அன்று ஆன்லைன் வாயிலாக ஆஜராக விஜய்க்கு அனுமதி அளித்து செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது.
விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி பிப்.24-ல் செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், தனது கணவரான விஜய்க்கும் நடிகை ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் தன்னால் இணைந்து வாழ முடியாது என்பதாலும் விவகாரத்து வழங்குமாறு கோரியிருந்தார்.
இந்த மனு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு ஏப்.20-ம் தேதி (நேற்று) விசாரணைக்கு வந்தது. முன்னதாக விஜய் தரப்பில், விசாரணைக்கு ஆன்லைன் வாயிலாக ஆஜராக நீதிமன்ற அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று விசாரணையில் இருதரப்பு வழக்கறிஞர்கள் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அ்ப்போது இந்த வழக்கு விசாரணையை ஜூன் 15-ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
மேலும் அன்றைய விசாரணையில் விஜய் ஆன்லைன் மூலம் ஆஜராக அனுமதி அளித்தும் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது.