திருச்செந்தூர் கோயிலைத் தொடர்ந்து சீரடி சாய்பாபா கோயிலில் விஜய் தரிசனம்

தேர்தல் முடிவு சாதகமாகச் சிறப்பு வழிபாடு
மகாராஷ்டிர மாநிலம் சீரடியில் உள்ள பிரசித்தி பெற்ற  சாய்பாபா கோயிலில் நடிகரும், தவெக கட்சித் தலைவருமான விஜய் நேற்று வழிபட்டார்.

மகாராஷ்டிர மாநிலம் சீரடியில் உள்ள பிரசித்தி பெற்ற  சாய்பாபா கோயிலில் நடிகரும், தவெக கட்சித் தலைவருமான விஜய் நேற்று வழிபட்டார்.

Updated on
1 min read

சென்னை: தவெக தலை​வர் விஜய் மகா​ராஷ்டிர மாநிலத்​தில் உள்ள புகழ்​பெற்ற சீரடி சாய்​பாபா கோயி​லில் நேற்று வழி​பாடு செய்​தார்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் கடந்த ஏப்​ரல் 23-ம் தேதி நடை​பெற்​றது. இதன் முடிவு​கள் மே 4-ம் தேதி வெளி​யாக உள்ள நிலை​யில், தவெக தலை​வர் விஜய் தனது ஆஸ்​தான ஜோதிடரின் ஆலோ​சனை​யின்​படி முக்​கிய​மான ஆன்​மிகப் பயணங்​களை மேற்​கொண்டு வரு​கிறார்.

அதன்​படி, தூத்​துக்​குடி மாவட்​டத்​தில் உள்ள அறு​படை வீடு​களில் ஒன்​றான திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயிலுக்கு நேற்று முன்​தினம் விஜய் சென்​றார். அங்கு மூல​வரைத் தரிசித்த விஜய், தனது அரசி​யல் வெற்​றிக்​காக​வும், எதிர்ப்​பு​கள் வில​க​வும் வேண்​டி, மிகுந்த சக்தி வாய்ந்​த​தாகக் கருதப்​படும் சத்ரு சம்​ஹார யாகத்தை முறைப்​படி நடத்​தி​னார். இந்த யாகம் அரசி​யல் வட்​டாரத்​தில் பெரும் விவாதத்தை ஏற்​படுத்​தி​யது.

திருச்​செந்​தூர் பயணத்​தைத் தொடர்ந்​து, மகா​ராஷ்டிர மாநிலத்​தி​லுள்ள சீரடி சாய்​பாபா கோயி​லில் நேற்று விஜய் தரிசனம் செய்​தார். இதற்​காக நேற்று அதி​காலை சென்​னை​யில் இருந்து தனி விமானம் மூலம் புறப்​பட்ட அவர், மகா​ராஷ்டி​ரா​வின் அஹில்ய நகர் (அகமது நகர்) சர்​வ​தேச விமான நிலை​யத்​தைச் சென்​றடைந்​தார்.

அங்​கிருந்து பலத்த பாது​காப்​புடன் காரில் சீரடி சென்​றார். முன்​ன​தாக விமான நிலை​யத்​தில் அவரைப் பார்த்த ரசிகர்​கள் உற்​சாகமடைந்​தனர். பிற்​பகல் 1 மணி அளவில் சீரடி சாய்​பாபா கோயிலை அடைந்த விஜய்க்​கு, கோயில் நிர்​வாகம் சார்​பில் வரவேற்பு அளிக்​கப்​பட்​டது.

சுமார் அரை மணி நேரம் கோயி​லில் தங்​கி​யிருந்த அவர், சாய் பாபா​வின் சமா​திக்கு முன்பு அமர்ந்து அமை​தி​யான முறை​யில் பிரார்த்​தனை செய்​தார். தேர்​தல் முடிவு​கள் வெளி​யாக இன்​னும் சில நாட்​களே உள்ள நிலை​யில், விஜய்​யின் இந்த அடுத்​தடுத்த ஆன்​மிகப் பயணங்​கள் அவரது கட்​சி​யினர்​ மத்​தி​யில்​ மிகுந்​த எதிர்​பார்ப்​பை ஏற்​படுத்​தியுள்​ளது.

இன்று ஆலோசனை: சென்னை பனையூரில் கட்சி வேட்பாளர்களுடன் விஜய் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் இதில் பங்கேற்க உள்ளனர். கருத்துக் கணிப்புகள் குறித்தும் ஆலோசனை நடத்தும் விஜய், வாக்கு எண்ணிக்கை தொடர்பாக நிர்வாகிகள், முகவர்களுக்கு பல்வேறு முக்கிய அறிவுரைகளை பிறப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

<div class="paragraphs"><p>மகாராஷ்டிர மாநிலம் சீரடியில் உள்ள பிரசித்தி பெற்ற  சாய்பாபா கோயிலில் நடிகரும், தவெக கட்சித் தலைவருமான விஜய் நேற்று வழிபட்டார்.</p></div>
செந்தில் பாலாஜிக்கு எதிரான புகாரை சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in