பிரச்சாரத்தில் குழந்தைகளுக்கு விஜய் வைத்த வேண்டுகோள்: தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவு

பிரச்சாரத்தில் குழந்தைகளுக்கு விஜய் வைத்த வேண்டுகோள்: தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவு
Updated on
1 min read

சென்னை: கடலூர் மாவட்​டம் புவனகிரியைச் சேர்ந்த வழக்​கறிஞர் வாசுகி தாக்​கல் செய்த பொது நல மனு​வில் கூறியிருப்பதாவது: பிரச்​சா​ரத்​தின்​போது வாக்​காளர்​களுக்கு பணப்​பட்​டு​வாடா செய்து திமுக, அதி​முக, தவெக வாக்காளர்​களிடம் செல்​வாக்கை செலுத்​தி​யுள்​ளன.

கடந்த ஏப்​.21-ம் தேதி நந்​தனம் ஒய்​எம்​சிஏ மைதானத்​தில் பேசிய விஜய், தவெக​வுக்கு வாக்​களிக்​கும்​படி பெற்​றோருக்கு அழுத்​தம் கொடுக்க வேண்​டுமென குழந்​தைகள் மீது உணர்​வுப்​பூர்​வ​மாக செல்​வாக்கை செலுத்​தி​யுள்​ளார். பல தொகுதிகளில் பணப்​பட்​டு​வாடா நடந்​துள்​ள​தாக செய்​தி​ வெளி​யானது.

தேர்​தல் நடவடிக்​கை​களில் குழந்​தைகள் மீது செல்வாக்கை செலுத்​தி​யது, பணப்​பட்​டு​வாடா உள்​ளிட்ட ஊழல் நடவடிக்​கை​களில் ஈடு​பட்​டது தொடர்​பாக திமுக, அதி​முக, தவெக கட்சிகளுக்கு எதி​ராக விசா​ரணை நடத்த உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.

இந்த வழக்கை விசா​ரித்த நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், வி.லட்​சுமி நாராயணன் அடங்​கிய அமர்​வு, மே 29-க்​குள் பதிலளிக்​க தேர்​தல் ஆணை​யம் மற்​றும் திமுக, அதி​முக, தவெக கட்​சிகளுக்கு உத்​தர​விட்​டுள்​ளது.

பிரச்சாரத்தில் குழந்தைகளுக்கு விஜய் வைத்த வேண்டுகோள்: தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவு
பத்திர பதிவுக்கு ரூ.3 லட்சம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in