சிறுமிகளின் வீடியோக்களை எக்காரணம் கொண்டும் வெளியிடக்கூடாது: ஊடகங்களுக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவு

சிறுமிகளின் வீடியோக்களை எக்காரணம் கொண்டும் வெளியிடக்கூடாது: ஊடகங்களுக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவு
Updated on: 
2 min read

சென்னை: ஜெம் வீரமணி வழக்​கில் தொடர்​புடைய சிறுமிகளின் வீடியோக்​களை எக்​காரணம் கொண்​டும் வெளி​யிடக்​கூ​டாது என ஊடகங்​கள், சமூக வலை​தளங்​களுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

ஜெம் வீரமணி வழக்​கில் பாதிக்​கப்​பட்ட சிறுமிகளின் வீடியோவை வெளி​யிட்ட ஊடகங்​கள் மீது நடவடிக்கை எடுக்​கக்​கோரி சென்​னையைச் சேர்ந்த துளிர் அறக்​கட்​டளை சார்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது.

அதில், சிறுமிகளுக்கு எதி​ராக நிகழ்த்​தப்​பட்​டுள்ள இந்த பாலியல் வன்​கொடுமை சம்​பவங்​கள் கடந்த 2025-ம் ஆண்டு கிடைத்த ஒரு பென்​-டிரைவ் மூல​மாக வெளிச்​சத்​துக்கு வந்​துள்​ளது. சில ஊடகங்​கள் பாதிக்​கப்​பட்ட சிறுமிகளின் வீடியோ காட்​சிகளை வெளி​யிடு​வ​தால் அந்த சிறுமிகள் மட்​டுமின்றி மற்ற சிறுமிகளின் தனிப்​பட்ட அந்​தரங்க உரிமை மற்​றும் பாது​காப்​புக்கு மிகப்​பெரிய அச்​சுறுத்​தல் ஏற்​பட்​டுள்​ளது. சிலர் தொலைக்​காட்​சிகளில் விவாதம் என்ற பெயரில் அப்​பட்​ட​மாக தனிமனித உரிமை​களை மீறிவரு​கின்​றனர். எனவே சிறுமிகளை அடை​யாளப்​படுத்​து​வோர் மீது சட்ட ரீதி​யாக கடும் நடவடிக்கை எடுக்க உத்​தர​விட வேண்​டும். அத்​துடன் சிறுமிகள் தொடர்​பான வீடியோக்​களை வெளி​யிட​வும் அனைத்து ஊடகங்​களுக்​கும் தடை விதிக்க வேண்​டும், எனக் கோரப்​பட்​டிருந்​தது.

இந்த வழக்கு நீதிபதி வி. லட்​சுமி நாராயணன் முன்​பாக நேற்று விசா​ரணைக்கு வந்​தது. காவல்​துறை தரப்​பில் ஆஜரான மாநில தலைமை குற்​றவியல் வழக்​கறிஞர் ஜான்​சத்​யன், “இந்த விவ​காரம் தொடர்​பாக வெளி​யான வீடியோக்​கள் மற்​றும் சமூக வலை​தளப்​பக்​கங்​களை முடக்​கக்​கோரி கூகுள், மெட்டா உள்​ளிட்ட நிறு​வனங்​களுக்​கும் கடிதம் அனுப்​பப்​பட்​டுள்​ளது. சிறுமிகளின் வீடியோக்​கள் வெளி​யானது தொடர்​பாக விசா​ரணை நடக்​கிறது” என்​றார்.

அதையடுத்து நீதிப​தி, “இந்த விவ​காரத்​தின் தீவிரம் தெரி​யாமல் சமூக ஊடகங்​களும், ஊடகங்​களும் செயல்​படு​கின்​றன. இதனால் பாதிக்​கப்​பட்ட யாரும் தைரிய​மாக புகார் அளி்க்க முன்​வர​மாட்​டார்​கள். மும்பை தாக்​குதல் சம்​பவத்​தின்​போது காவல்​துறை​யின் நடவடிக்​கைகள் நேரலை​யில் ஒளிபரப்பு செய்​யப்​பட்​ட​தால் தீவிர​வா​தி​கள் தங்​களது அணுகு​முறையை மாற்றி செயல்​பட்​டனர். பத்​திரிகை சுதந்​திரம் என்​பது ஊடக விசா​ரணை என்ற பெயரில் விவாதம் செய்​வதற்​கான உரிமை அல்ல” என்​றார்.

பின்​னர் நீதிப​தி, வழக்​கில் தொடர்​புடைய சிறுமிகளின் வீடியோக்​களை எக்​காரணம் கொண்​டும் வெளி​யிடக்​கூ​டாது என ஊடகங்​கள் மற்​றும் சமூக வலை​தளங்​களுக்கு தடை விதித்​தார். வழக்​கின் முன்​னேற்​றம் குறித்து வாரம் ஒரு​முறை காவல்​துறை பத்​திரிகை செய்​தி​

குறிப்பை வழங்க வேண்​டும் என்​றும், இந்த வழக்​கில் மத்​திய, மாநில அரசுகள், வீடியோக் களை வெளி​யிட்ட ஊடக நிறு​வனங்​கள்​ பதிலளிக்​க உத்​தர​விட்​டு வி​சா​ரணை​யை செப்​.30-க்​கு தள்​ளி வைத்​தார்​.

சிபிஐ விசாரணை கோரி முறையீடு

ஜெம் வீரமணி தொடர்​புடைய வழக்கை சிபிஐக்கு மாற்​றக்​கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மூத்த வழக்​கறிஞர் என்​.எல்​.​ராஜா, தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி. அருள்​முரு​கன் ஆகி யோர் அடங்​கிய அமர்​வில் நேற்று காலை முறையீடு செய்​தார்.

அப்​போது அவர், ‘‘இந்த வழக்​கில் சம்​பந்​தப்​பட்ட சிறுமிகளின் வீடியோக்​கள் திட்​ட​மிட்டு கசி​ய​விடப்​பட்​டுள்​ளன. குற்​ற​வாளி​கள் மீது கால​தாமத​மாக போலீ​ஸார் நடவடிக்கை எடுத்​துள்​ளனர். வழக்​கையே முடித்து வைக்​கக்​கோரி போலீ​ஸார் போக்சோ சிறப்பு நீதி​மன்​றத்​தில் அறிக்கை தாக்​கல் செய்​துள்​ளனர். குற்​றத்தை மறைக்க கோடிக்​கணக்​கில் பணம் கைமாறி​யுள்​ளது. இன்​னும் பல உண்​மை​கள் வெளியே வரவில்​லை. எனவே இந்த வழக்கை சிபிஐ விசா​ரணைக்கு மாற்​றக்​கோரி வழக்கறிஞர் ராஜசேகர் தரப்​பில் மனு தாக்​கல் செய்​துள்​ளோம். எனவே இந்த மனுவை அவசர வழக்​காக விசா​ரணைக்கு எடுக்க வேண்​டும்’’ என்​றார்.

அதையடுத்து நீதிப​தி​கள், இந்த வழக்கை விசா​ரிக்க தமிழக அரசு சிறப்பு புல​னாய்​வுக்​குழுவை அமைத்​துள்​ளது. தற்​போதைய சூழலில் தமிழக போலீ​ஸாரே புலன் விசா​ரணையை தொடரட்​டும். இதுதொடர்​பான மனு விசா​ரணைக்கு ஏற்​கப்​படும் என்​றனர். இந்​நிலை​யில், ஜெம் வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்​றக்​கோரி வாராகி என்​பவரும் உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​துள்​ளார்.

நீதி​மன்ற காவல் அக்.9 வரை நீட்​டிப்​பு: ஜெம் வீரமணி​யின் நீதி​மன்ற காவல் நேற்​றுடன் முடிவடைந்த நிலை​யில், அவருடைய நீதி​மன்ற காவலை வரும் அக்.9 வரை நீட்​டித்து சென்னை போக்சோ சிறப்பு நீதி​மன்ற நீதிபதி எஸ்​.பத்மா உத்​தர​விட்​டுள்​ளார். இதற்​காக வீரமணி காணொலி காட்சி மூல​மாக சிறை​யில் இருந்​த​வாறு நீதிப​தி முன்​பாக ஆஜர்​படுத்​தப்​பட்​டார்​.

சிறுமிகளின் வீடியோக்களை எக்காரணம் கொண்டும் வெளியிடக்கூடாது: ஊடகங்களுக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவு
ஜெம் வீரமணி பாலியல் வழக்கை அரசியலாக்க வேண்டாம்: சமூக பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள் என நீதிபதி அறிவுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in