“இடைத்தேர்தலில் வாக்குக்கு பணம் அளிக்காமல் வெற்றி” - தவெகவுக்கு அண்ணாமலை பாராட்டு

அண்ணாமலை

அண்ணாமலை

Updated on: 
2 min read

கோவை: “தமிழகத்தில் இடைத்தேர்தலில் முதல் முறையாக தாராபுரம் மற்றும் மதுராந்தகத்தில் பணம் கொடுக்காமல் இடைத்தேர்தல் நடந்துள்ளது. பணம் கொடுக்காமல் நடந்த இடைத்தேர்தலை பாராட்டலாம்” என 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்தார்.

'வீ த லீடர்ஸ்' அமைப்பு சார்பில், டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அறம் மற்றும் அரசியல் பயிற்சி மைய தொடக்க விழா கோவை நீலாம்பூர் பிஎஸ்ஜி ஐடெக் வளாகத்தில் இன்று நடந்தது.

அதைத் தொடர்ந்து 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: தமிழ்நாட்டில் நாளைக்கு உள்ளாட்சித் தேர்தல் என்றாலும், இன்றே களம் காண வீ த லீடர்ஸ் அமைப்பு தயாராக உள்ளது. அதற்கான பயிற்சிகளை, தற்போது மேற்கொண்டு வருகிறோம். அடிப்படை மாற்றம் உள்ளாட்சியில் தொடங்கி, எம்எல்ஏ, எம்.பி. தேர்தல் வரை வரும்.

ஜெம் வீரமணி கைது தமிழக அரசால் செய்யபட்டிருப்பது வரவேற்கத்தக்கது. பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு இருப்பதையும் வரவேற்கிறேன். தமிழகத்தில் இடைத்தேர்தலில் முதல் முறையாக தாராபுரம் மற்றும் மதுராந்தகத்தில் பணம் கொடுக்காமல் இடைத்தேர்தல் நடந்துள்ளது. பணம் கொடுக்காமல் நடந்த இடைத்தேர்தலை பாராட்டலாம். புதிதாக பலர் சட்டப்பேரவைக்கு வந்திருக்கின்றனர். அதற்கு காரணமாக தமிழக வெற்றி கழகத்தை பாராட்ட வேண்டும்.

முதல்வர் அடிக்கடி மக்களை காண வரவேண்டும். வந்தால் தான் வேலை நடக்கும். விஜய் ஒரு முன்னுதாரணத்தை களத்துக்கு கொண்டு வர வேண்டும். மக்களை பார்ப்பதற்கு எத்தனையோ முதல்வர்கள் நேரத்தை ஒதுக்குகின்றனர். அது போல ஒரு நாளை ஒதுக்குங்கள். நாள் முழுக்க மக்களை பாருங்கள்.

முதல்வர் விஜய்க்கு அன்பான வேண்டுகோள். அவருக்கு போதுமான பாப்புலாரிட்டி இருக்கிறது. அவர் ஆந்திரா சென்றாலும் ஆயிரக்கணக்கான நபர்கள் நிற்கின்றனர். இனி விஜய் வந்தால் பாப்புலர் என காட்ட வேண்டிய அவசியம் இல்லை. முதல்வர் வருகையின் போது, கோவையில் சாலைகளின் இருமருங்கிலும் தடுப்புகள் தேவையில்லை. இது பலருக்கு தொந்தரவாக இருக்கிறது.

முதல்வர் எளிமையின் உதாரணமாக இருக்க வேண்டும். சாதாரண பாதுகாப்பு கொடுத்தாலே, அவரை வரவேற்று விட்டு தமிழக மக்கள் அவர்களது வேலையை பார்ப்பார்கள் . இரண்டு பக்கமும் தடுப்புகள் போட்டு இடையூறு செய்ய வேண்டாம். அடிப்படை பாதுகாப்பு கொடுத்தாலே போதும். மக்களை முடிந்தவரை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு செல்லுங்கள், இதற்கு முதல்வர் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

தமிழக வெற்றிக்கழகம் ஆட்சிக்கு இப்போதுதான் வந்துள்ளனர். நிறைய செய்திருக்கலாம் என எதிர்பார்க்கிறேன். ஓராண்டு காலம் பொறுத்திருந்து பார்ப்போம். அதன் பின்பு நிறை, குறைகளை மக்களிடம் வைத்து பேசுவோம்.

காற்றாலை உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் தமிழகம், எதற்காக ரூ.35 கொடுத்து மின்சாரத்தை வாங்க வேண்டும் என்ற கேள்வி இருக்கிறது. இந்த விலையை நாம் தான் கொடுக்கிறோம். மின்சார விவகாரத்தில் அடுத்த ஓராண்டுக்கான அரசின் பார்வையை சொல்ல வேண்டும். வீ த லீடர்ஸ் அடுத்த ஓராண்டுக்குள் ஒரு லட்சம் பேருக்கு பயிற்சி கொடுத்து விடுவோம். ஓராண்டுக்குள் நமக்கும், மற்ற அரசியல் கட்சிகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். ’வீ த லீடர்ஸ்’ செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.

திமுக, அதிமுக பாமக, நாம் தமிழர் என நிறைய கட்சிகள் இருக்கின்றன, நாங்கள் மாறுபட்டு நிற்கின்றோம். ஒவ்வொரு நாளும் ஒரு புதிய முயற்சி, புதிய பாதையில் பயணித்துக் கொண்டு இருக்கிறோம். எங்கள் அமைப்பின் சார்பில் தலைவர்களை நிறுத்த வேண்டும் என நினைத்திருக்கும்போது, நாங்கள் ஏன் கூட்டணிக்கு செல்ல வேண்டும். எல்லா இடத்திலும் மாற்றத்தை கொடுக்க வேண்டும் என்பதுதான் எண்ணம்.

மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பதவி விலகி இருக்கின்றார். அவரை அழைத்து பேசினேன். கொங்கு பகுதியில் இருந்து வந்தவர். தமிழகத்திற்கு பல பணிகளை செய்து இருக்கிறார். அவரது முடிவு என்னவாக இருந்தாலும் கட்சியின் முடிவு, பிரதமரின் முடிவு.

டெல்லியில் இளைஞர்கள் கேள்வி கேட்பது தவறு அல்ல. அரசு அவர்கள் தரப்பு நியாயத்தை சொல்வதும் தவறு அல்ல. இளைஞர்கள் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும். நீர் மேலாண்மையில் மிக மோசமான மாநிலமாக தமிழகம் இருக்கிறது. ‘ஜெயிலர் 2’ படத்துக்கு ரஜினிகாந்துக்கு மெசேஜ் போட்டு வாழ்த்து சொல்லிவிட்டேன். வேலைகளை முடித்து விட்டு ‘ஜெயிலர் 2’ பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>அண்ணாமலை </p></div>
“எஸ்ஐஆர் விவகாரத்தில் முதல்வர் விஜய் பதவி விலகத் தயாரா?” - நயினார் நாகேந்திரன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in