சேந்தமங்கலம் தொகுதியில் வெற்றி விருந்து விழா: 2 ஆயிரம் பேருக்கு விருந்து வைத்த எம்எல்ஏ

அமைச்சர், எம்எல்ஏக்கள் பங்கேற்பு
Updated on: 
1 min read

நாமக்கல்: சேந்​தமங்​கலம் தொகுதி​யில் தவெக சார்​பில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்ற சந்​திரசேகர், வெற்றி விருந்து விழா என்ற பெயரில் நேற்று கிடா வெட்டி 2 ஆயிரம் பேருக்கு விருந்து வைத்​தார்.

தமிழக வெற்​றிக் கழகம் ஆட்சி அமைந்த பிறகு செயல்​படுத்​தும் திட்​டங்​களின் பெயர்​களில் வெற்றி என்ற வார்த்தை இணைத்து அறி​விக்​கப்​பட்டு வரு​கிறது. குறிப்​பாக பேருந்​துகளில் பெண்​களுக்கு வெற்​றிப் பயணம் திட்​டம் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. அந்த வகை​யில் சேந்​தமங்​கலம் தொகுதி​யில் தவெக சார்​பில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்ற சட்​டப்​பேரவை உறுப்​பினர் பொ.சந்​திரசேகர், வெற்றி விருந்து விழா என்ற பெயரில் தொகுதி மக்​களுக்கு கிடா வெட்டி விருந்து வைத்​தார்.

நாமக்​கல் அருகே ரெட்​டிப்​பட்​டி​யில் நடந்த இந்த விருந்து விழா​வில் பத்​திர பதிவுத்​துறை அமைச்​சர் லோகேஷ் தமிழ்ச்​செல்​வன், நாமக்​கல், சேலம் மேற்கு தொகுதி எம்​எல்​ஏக்​கள் திலீப், லட்​சுமணன் உள்​ளிட்ட கட்​சிப் பிர​முகர்​கள், தொகுதி மக்​கள் பலர் கலந்​து​கொண்​டனர்.

விருந்​தில் 250 கிலோ ஆட்டு இறைச்சி, 200 கிலோ கோழி இறைச்சி, 2000 முட்​டைகளு​டன் விருந்து பரிமாறப்​பட்​டது. வெள்ளை சாதம், இறைச்சி குழம்பு, வறு​வல், ரசம், பாயசம், ஐஸ்கிரீம் பரிமாறப்​பட்​டது. இது​குறித்து எம்​எல்ஏ சந்​திரசேகர் கூறும்​போது, “வேண்​டுதலுக்​காக கொல்​லிமலை அடிவாரத்​தில் உள்ள பெரியசாமி கோயி​லில் 25 கிடா வெட்டி விருந்து வைக்​கப்​பட்​டது” என்​றார்.

சேந்தமங்கலம் தொகுதியில் வெற்றி விருந்து விழா: 2 ஆயிரம் பேருக்கு விருந்து வைத்த எம்எல்ஏ
தேனி சிறையில் தப்பியது 17 பேரா? 21 பேரா? - கைதி வெளியிட்ட வீடியோவால் சர்ச்சை

X