தமிழ்த்தாய் வாழ்த்தை 3-வதாக பாடுவது அவமானப்படுத்துவது அல்ல: குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கருத்து

தமிழ்த்தாய் வாழ்த்தை 3-வதாக பாடுவது அவமானப்படுத்துவது அல்ல: குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கருத்து
Updated on
2 min read

திருவாரூர்: தமிழ்த்​தாய் வாழ்த்தை 3-வ​தாக பாடு​வதை அவமானப்​படுத்​து​வ​தாக எடுத்​துக் கொள்​ளக்​ கூ​டாது. பெற்ற தாயை யாரும் அவமானப்​படுத்த மாட்​டார்​கள் என்​பதை போல இதை​யும் கருத வேண்​டும் என குடியரசு துணைத் தலை​வர் சி.பி. ராதாகிருஷ்ணன் கருத்து தெரி​வித்​தார்.

திருவாரூர் நீலக்குடியில் உள்ள தமிழ்​நாடு மத்​திய பல்​கலைக்​கழகத்​தின் 11-வது பட்​டமளிப்பு விழா நேற்று நடை​பெற்​றது. பல்​கலைக்​கழக வேந்​தர் பத்​ம​நாபன் தலைமை வகித்​தார். துணைவேந்​தர் சுலோச்​சனா சேகர் வரவேற்​றார். தமிழக ஆளுநர் ராஜேந்​திர விஸ்​வ​நாத் அர்​லேகர், நாகை எம்​.பி. வை.செல்​வ​ராஜ் ஆகியோர் முன்​னிலை வகித்​தனர்.

விழா​வில், குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் சிறப்பு விருந்​தின​ராக கலந்​து​கொண்​டு, 50 மாணவ, மாணவி​களுக்கு தங்​கப் பதக்​கம் மற்​றும் பட்​டங்​களை வழங்கி பாராட்​டி​னார். அதைத்​தொடர்ந்து நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் 1053 மாணவ, மாணவி​கள் பட்​டம் பெற்​றனர்.

விழா​வில், குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் பேசி​ய​தாவது: பல்​துறை கல்​வி, ஆராய்ச்​சி, புத்​தாக்​கம் மற்​றும் விழு​மிய அடிப்​படையி​லான கற்​றலுக்கு முக்​கி​யத்​து​வம் அளிப்​ப​தன் மூலம், தமிழ்​நாடு மத்​தி​யப் பல்​கலைக்​கழகம் இந்த நோக்​கத்​தைச் சிறப்​பாக முன்​னெடுத்து வருவது பாராட்​டுக்​குரியது.

பெண்​களின் உயர் கல்​விச் சேர்க்கை 2014-15-ம் ஆண்​டில் 1.57 கோடியி​லிருந்து 2023-24-ம் ஆண்​டில் 2.24 கோடி​யாக, அதாவது 42.2 சதவீதம் அதிகரித்​துள்​ளது. பட்​டம் பெறும் மாணவர்​கள், வகுப்​பறை​களை விட்டு வெளி​யேறி​னாலும், கற்​றலை ஒரு​போதும் விட்​டு​விடக்​கூ​டாது.

இன்று பெறும் பட்​டம், வாழ்​நாள் முழு​வதும் தொடரும் அறி​வுத் தேடலின் தொடக்​கம் மட்​டுமே. எந்​தத் தொழிலை தேர்ந்​தெடுத்​தா​லும், நாட்​டின் வளர்ச்​சிக்கு உதவிட வேண்​டும்.

பிரதமர் மோடி​யின் தொலைநோக்கு தலை​மை​யின் கீழ், சுதந்​திரத்​தின் நூற்​றாண்டை ஒட்டி வளர்ச்​சி​யடைந்த, அனை​வரை​யும் உள்​ளடக்​கிய, புது​மை​யான மற்​றும் நிலை​யான பாரதத்தை உரு​வாக்​கும் விக்​சித் பாரத்​-2047 என்ற இலக்கை நாடு முன்​னெடுத்து வரு​கிறது. அதை நிறைவேற்​று​வ​தில், இளைஞர்​களின் பங்கு இருக்க வேண்​டும்.

சமீபத்​தில் நாடாளு​மன்​றத்​தில் பொதுத் தேர்​வு​கள் திருத்த மசோதா நிறைவேற்​றப்​பட்​டது. தேர்வு முறை​யில் முறை​கேடு​களை தடுப்​பதும், மாணவர்​களின் நலன்​களைப் பாது​காப்​பதும் மிக​வும் முக்​கி​யம். பொதுத் தேர்வு முறை​யின் நேர்​மை​யை​யும், வெளிப்​படைத்​தன்​மை​யை​யும் உறுதி செய்​வ​தில் இது​போன்ற சீர்​திருத்​தங்​கள் முக்​கிய​மானவை.

இளைஞர்​களின் எதிர்​காலத்​தைச் சீரழிக்​கும் போதைப்​பொருள் அச்​சுறுத்​தலைக் கட்​டுப்​படுத்த காவல்​துறை இது தொடர்​பான குற்​ற​வாளி​கள் மீது எந்த ஒரு கருணை​யும் காட்​டக்​கூ​டாது. இளைஞர்​கள் ஒவ்​வொரு​வரும் போதை பொருட்​களை தவிர்ப்​பது மட்​டுமல்​லாது, உங்​கள் நண்​பர்​களும் போதைப்​பொருளில் இருந்து விலகி இருக்க ஊக்​கப்​படுத்த வேண்​டும்.

தமிழ்த்​தாய் வாழ்த்தை மூன்​றாவ​தாக பாடு​வ​தால், அதை அவமானப்​படுத்​து​வ​தாக எடுத்​துக் கொள்​ளக் கூடாது. சொந்த நாட்​டை​யும், பெற்ற தாயை​யும் யாரும் அவமானப்​படுத்த மாட்​டார்​கள் என்​ப​தைப் போல தமிழ்த்​தாய் வாழ்த்​தை​யும் மூன்​றாவ​தாக பாடு​வதை எடுத்​துக்​கொள்ள வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

முன்​ன​தாக விழா​வில் வந்தே மாதரம், தேசிய கீதம் பாடிய பிறகு 3-வ​தாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்​பட்​டது குறிப்​பிடத்​தக்​கது.

தடுமாறிய ஆளுநர்

பட்டமளிப்பு விழா முடிவடைந்த பின்னர், குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உள்ளிட்டோர் விழா மேடையிலிருந்து பின்புறமாக வெளியேறினர். அப்போது, தரையில் விரித்திருந்த தரைவிரிப்பில் கால் இடறி ஆளுநர் அர்லேகர் கீழே விழுந்தார். உடன் சென்ற பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தூக்கி அருகில் இருந்த அறைக்கு அழைத்துச் சென்றனர். சிறிது நேர ஓய்வுக்குப் பின் ஆளுநர் அங்கிருந்து புறப்பட்டார்.

தமிழ்த்தாய் வாழ்த்தை 3-வதாக பாடுவது அவமானப்படுத்துவது அல்ல: குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கருத்து
சிஎஸ்கே பயிற்சியாளர் பதவிக்கு இயன் மோர்கன் செட் ஆகமாட்டார்: கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கருத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in