அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்கு பதிய கோரியதில் தீர்ப்பு தள்ளிவைப்பு

ரூ.1,000 கோடி ஊழல் நடந்ததாக அமலாக்கத் துறை கடிதம்
அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்கு பதிய கோரியதில் தீர்ப்பு தள்ளிவைப்பு
Updated on
1 min read

சென்னை: நக​ராட்சி நிர்​வாகத் துறை​யில் பணி நியமனம் மற்​றும் டெண்​டர் ஒதுக்​கீட்​டில் ரூ.1,000 கோடிக்கு மேல் ஊழல் நடந்​துள்​ள​தாக அமலாக்கத் துறை எழு​திய கடிதத்​தின் அடிப்​படை​யில் அமைச்​சர் கே.என்​.நேரு உள்​ளிட்​டோர் மீது வழக்கு பதிவு செய்​யக் கோரிய வழக்​கின் தீர்ப்பை உயர் நீதி​மன்​றம் தள்​ளி​வைத்​துள்​ளது.

தமிழக நகராட்சி நிர்​வாகம், குடிநீர் வழங்​கல் துறை​யில் 2 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோரை பணி நியமனம் செய்ய லட்​சணக்​கணக்​கில் பணம் வசூலித்​து ரூ.1,000 கோடிக்குமேல் ஊழல் நடந்​துள்​ள​தாக தமிழக டிஜிபிக்கு அமலாக்​கத் துறை கடிதம் அனுப்​பியது. இதன் அடிப்​படை​யில், அமைச்​சர் கே.என்​.நேரு, அவரது சகோ​தரர் ரவிச்​சந்​திரன் உள்​ளிட்​டோர் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி, மதுரையைச் சேர்ந்த ஆதி​நா​ராயணன், அதி​முக எம்​.பி. இன்​பதுரை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தனர்.

இந்த வழக்கு கடந்த முறை விசா​ரணைக்கு வந்​த​நிலையில் தலைமை நீதிபதி ஸ்​ரீவஸ்​த​வா, நீதிபதி ஜி.அருள்​முரு​கன் அமர்​வில் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது நடந்த வாதம்:

அரசு தலைமை வழக்​கறிஞர்பி.எஸ்​.​ராமன்: மனு​தா​ரர் ஆதி​நா​ராயணன் மீது 2013 முதல் பதிவுசெய்​யப்​பட்ட 32 வழக்​கு​களில் 18 வழக்​கு​கள் முடிந்​துவிட்​டன. 2 கொலை, ஒரு கொலை முயற்சி உள்​ளிட்ட வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளன. (இதற்கு விளக்​கம் அளித்து ஆதி​நா​ராயணன் தரப்​பில் பதில்​மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது.)

தலைமை நீதிப​தி: மனு​தா​ரர் தொடர்ந்​துள்ள இந்த வழக்​கின் உண்​மைத் தன்மை குறித்த சந்​தேகம் எழுகிறது.

இன்​பதுரை தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் வி.​ராக​வாச்​சா​ரி: இந்த முறைகேடு குறித்து ஆதா​ரங்​களுடன் அமலாக்​கத் துறை டிஜிபிக்கு கடிதம் எழு​தி​யுள்​ளது. அதன் அடிப்​படை​யில் அமைச்​சர் உள்​ளிட்​டோர் மீது வழக்கு பதிய​லாம்.

அமலாக்​கத் துறை வழக்​கறிஞர் என்​.ரமேஷ்: பெரும் தொகை லஞ்​ச​மாக வசூலிக்​கப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பான ஆதா​ரங்​களை காவல் துறை அதி​காரி​களுக்கு அனுப்புவது சட்​டப்​பூர்வக் கடமை.

தலைமை நீதிப​தி: ஆரம்​பகட்ட விசா​ரணை நடத்​தாமல் நேரடி​யாக வழக்கு பதிவு செய்​தால்,குற்​றம்​சாட்​டப்​பட்​ட​வர்​கள் அதை காரணம் காட்டி வழக்கை ரத்து செய்​யக் கோரலாம்.

லஞ்ச ஒழிப்​புத் துறை வழக்​கறிஞர் என்​.ஆர்​.இளங்​கோ: அதி​காரப்​பூர்​வ​மற்ற ஆவணங்​களின் அடிப்​படை​யில் மனு​தா​ரர்​கள் வழக்கு தொடர்ந்​துள்​ளனர். அமலாக்​கத் துறைகடிதத்​தின்​படி விசா​ரணை தொடங்​கி​யுள்​ளது.

வழக்​கறிஞர் ராமன்: ஆரம்​பகட்ட விசா​ரணையை முடிக்கலஞ்ச ஒழிப்​புத் துறைக்கு 120நாட்​கள் அவகாசம் உள்​ளது.

டிஜிபி தரப்​பு வழக்​கறிஞர் விக்​ரம் சவுத்​ரி: வழக்கு தொடர மனு​தா​ரர்​களுக்கு எந்த அடிப்​படை உரிமை​யும் இல்​லை. இவ்​வாறு வாதம் நடந்​தது. அனைத்து தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி​கள், வழக்​கின்தீர்ப்பை தேதி குறிப்​பி​டா​மல் தள்​ளி​வைத்​தனர்​.

அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்கு பதிய கோரியதில் தீர்ப்பு தள்ளிவைப்பு
“தேர்தலில் தோற்கப் போவதால் தமிழகத்துக்கு பாஜக நிதி ஒதுக்கவில்லை” - முதல்வர் ஸ்டாலின் பேச்சு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in