Published : 01 Mar 2014 10:50 PM
Last Updated : 01 Mar 2014 10:50 PM

என்ன சொல்கிறார்கள் இவர்கள்?

கனிமொழி - செயலாளர், மாநில மருத்துவர் அணி, திமுக: வடசென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் தவிர வேறு பெரிய திட்டங்கள் எதுவும் இல்லை. சுகாதாரம் பெரும் பிரச்சினையாக இருக்கிறது.

போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண சொல்லிக்கொள்ளும்படியான திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. வட சென்னைக்கெனத் தனியாக ஒருங்கிணைந்த திட்டம் கொண்டுவராவிட்டால் பழைய டெல்லிபோல ஒதுக்கப்பட்ட நகரமாகிவிடும். வரும் எம்.பி-யாவது இத்தொகுதிக்கு ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இளங்கோ -‘தேவை’ சமூக நல அமைப்பு: இங்கு முறையே 2007, 2010, 2011 ஆண்டுகளில் தொடங்கப்பட்ட கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் ரயில்வே மேம்பாலம், வியாசர்பாடி ரயில்வே மேம்பாலம், மூலக்கடை சந்திப்பு மேம்பாலம் ஆகிய பணிகள் முடியவில்லை. இதனால், போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்சினையாக இருக்கிறது. எண்ணூர் துறைமுகம் சாலையில் கனரகச் சரக்கு வாகனங்களால் இதர வாகனங்களுக்குப் பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, மேற்கண்ட பணிகளை மத்திய, மாநில அரசுகள் விரைந்து முடிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x