முஸ்லிம் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்: வேலூர் இப்ராஹிம்

வேலூர் இப்ராஹிம் | கோப்புப்படம்
வேலூர் இப்ராஹிம் | கோப்புப்படம்
Updated on
1 min read

மதுரை: பாஜக சிறு​பான்​மைப் பிரிவு தேசிய செய​லா​ளர் வேலூர் இப்​ராஹிம் மதுரை மாவட்ட ஆட்​சி​யர் ப.ஆ​காஷிடம் நேற்று மனு அளித்​தார். பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: கடந்த திமுக ஆட்​சி​யில், இஸ்​லாம் மதத்​துக்கு மாறிய​வர்​களுக்​கு, ‘பிற்​படுத்​தப்​பட்ட வகுப்பு முஸ்​லிம்’ (பிசிஎம்) சான்​றிதழும், 3.5 சதவீத இட ஒதுக்​கீட்டு அரசாணையும் வெளி​யிடப்​பட்​டது.

இதனை உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு ரத்து செய்தது. இஸ்​லாம் மத நம்​பிக்​கை​யில் சாதி இல்​லை. இங்கு வந்த பின்​பும் சாதி அடிப்​படை​யில் இடஒதுக்​கீடு பெற முயற்​சிப்​பது இஸ்​லாம் நம்​பிக்​கைக்கு எதி​ரானது. எனவே, தமிழகத்​தில் முஸ்​லிம்​களுக்கு வழங்​கப்​பட்டு வரும் 3.5 சதவீத உள் இடஒதுக்​கீட்டை உடனடி​யாக ரத்து செய்ய வேண்​டும். வாக்கு வங்​கிக்​காக, மதமாற்​றத்தை ஊக்​குவிக்​கும் வகை​யில் 3.5 சதவீத இடஒதுக்​கீடு வழங்​கு​வது சட்​ட​விரோதம். இதை முஸ்​லிம்​கள் புரிந்து கொள்ள வேண்​டும்.

வேலூர் இப்ராஹிம் | கோப்புப்படம்
“பெண்களின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் இருக்கக் கூடாது” - அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in