தவெகவினரால் திருப்பலிக்கு தடை ஏற்படவில்லை: வேளாங்கண்ணி பேராலயம் விளக்கம்

வேளாங்கண்ணியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பேராலய துணை அதிபர் அற்புதராஜ்.

வேளாங்கண்ணியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பேராலய துணை அதிபர் அற்புதராஜ்.

Updated on
1 min read

நாகப்பட்டினம்: வேளாங்​கண்ணி பேரால​யத்​தில் தவெக தொண்​டர்​களால் திருப்​பலி தாமத​மான​தாக வெளி​யான செய்​தி​களுக்கு பேராலய நிர்​வாகம் விளக்​கம் அளித்​துள்​ளது.

இதுகுறித்து பேராலய துணை அதிபர் அற்​புத​ராஜ் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறியது: மே 2-ம் தேதி அதி​காலை 5 மணிக்கு தவெக தலை​வர் விஜய், பேரால​யத்​துக்கு வர இருப்​ப​தாக ஊடகங்​கள் வழி​யாக செய்தி பரவியது.

ஆனால், அதுகுறித்து பேராலய நிர்​வாகத்​துக்கு எவ்​வித தகவலும் கொடுக்​கப்​பட​வில்​லை. மே 2-ம் தேதி காலை 5 மணிக்கு வழக்​க​மாக பேரால​யத்தை திறந்​து, திருப்​பலிக்கு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டன.

அப்​போது, அங்கே ஏராள​மான தவெக தொண்​டர்​கள் இருந்​தனர். திருப்​பலிக்கு முன்​ன​தான ஜெபம் தொடங்​கும்​போது, அந்த தொண்​டர்​கள் சப்​தமிட்டு கொண்​டிருந்​த​தால், அவர்​களை கலைந்து செல்​லு​மாறு குருக்​கள் அறி​வுறுத்​தினர்.

அதையேற்று அவர்​கள் கலைந்​துச் சென்​றனர். பின்​னர், வழக்​கம்​ போல 5.40-க்கு ஜெப​மும், காலை 6 மணிக்கு திருப்​பலி​யும் நடை​பெற்​றது. அன்​றைய திருப்​பலி 15 முதல் 30 நிமிடங்​கள் வரை தாமத​மானது என்று பரவிய தகவல்​கள் உண்மை இல்​லை.

பேராலய பகு​தி​யில் பரபரப்பை கட்​டுப்​படுத்​தும் வித​மாக, மாவட்ட நிர்​வாகம் மற்​றும் மாவட்ட காவல் துறை​யிடம் இதை தெரி​வித்​தோம்.

அவர்​கள் மேலிடத்​தில் தொடர்பு கொண்டு பேசி​விட்​டு, விஜய் வரவில்​லை, தவெக பொதுச் செய​லா​ளர் என்​.ஆனந்த் தான் வரு​கிறார் என்று கூறி​னார்​கள்.

மற்ற தலை​வர்​களை வரவேற்​பது ​போல அவரை​யும் வரவேற்று மரி​யாதை செய்​தோம். ஊடகங்​களில் பரவியது​போல அன்​றைய தினம் திருப்​பலி தாமத​மும் ஏற்பட​வில்​லை, தடைபட​வும் இல்​லை. இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

<div class="paragraphs"><p>வேளாங்கண்ணியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பேராலய துணை அதிபர் அற்புதராஜ். </p></div>
பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: தொழில்நுட்பக் கல்வித் துறை அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in