

திருமாவளவன்
சென்னை: தவெக வேட்பாளர்களை ஆதரித்து விசிக சார்பில் செப்.30-ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
இலங்கையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி உயிரிழந்த திலீபன் நினைவு நாளையொட்டி திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அறப்போராட்டம் நடத்தி தனது இன்னுயிரை நீத்தார் திலீபன். ஈழம் தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடத்த ஐநா உள்பட சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து விசிக சார்பில் தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு குழுவை நியமித்திருக்கிறோம். அந்தக் குழு வாக்குச்சாவடி வாரியாக மேலும் பணிக்குழுக்களை நியமித்து வருகிறது. வரும் 30-ம் தேதி மதுராந்தகத்தில் தவெக வேட்பாளரை ஆதரித்து பொதுக்கூட்டம் நடத்தவுள்ளோம். தாராபுரம் கூட்ட தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.