தூத்துக்குடியில் விசிக பிரமுகர் படுகொலை: திமுக நிர்வாகி உட்பட 5 பேர் கைது

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள். உள்படம்: கொலை செய்யப்பட்ட பாலமுருகன்

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள். உள்படம்: கொலை செய்யப்பட்ட பாலமுருகன்

Updated on: 
1 min read

தூத்துக்குடி: டிஜிட்​டல் பேனர் வைப்​ப​தில் ஏற்​பட்ட தக​ராறில் தூத்​துக்​குடி​யில் விடுதலைச் சிறுத்​தைகள் கட்சி பிர​முகர் வெட்​டிக் கொலை செய்​யப்​பட்​டார். இது​தொடர்​பாக திமுக நிர்​வாகி உட்​பட 5 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

தூத்​துக்​குடி தாளமுத்​துநகர் சோட்​டையன்​தோப்பு பகுதி​யைச் சேர்ந்​தவர் பாலமுருகன் என்ற பாலா (43). விடுதலைச் சிறுத்​தைகள் கட்​சி​யின் ஓட்​டப்​பிடாரம் ஒன்​றிய முன்​னாள் துணைச் செய​லா​ளரான இவர், காய்​கறி மற்​றும் மளி​கைக் கடை நடத்தி வந்​தார்.

நேற்று காலை 6.30 மணி அளவில் சோட்​டையன்​தோப்பு பகுதி​யில் உள்ள பெட்​ரோல் பங்​கில் பெட்​ரோல் போடுவதற்​காக மோட்​டார் சைக்​கிளு​டன் பாலமுருகன் நின்று கொண்​டிருந்​தார். அப்​போது, அங்கு மோட்​டார் சைக்​கி​ளில் வந்த சிலர், பாலமுருகனை அரிவாளால் சர​மாரியாக வெட்டி விட்டு தப்​பினர். இதில் பலத்த காயமடைந்த பாலமுருகன் சம்​பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தார்.

தகவல் அறிந்​ததும் திருநெல்​வேலி சரக டிஐஜி திருநாவுக்​கரசு, தூத்​துக்​குடி எஸ்பி சிவபிரசாத், டிஎஸ்பி குரு​வெங்​கட்​ராஜ், தாளமுத்​துநகர் காவல் ஆய்​வாளர் பாலமுருகன் மற்​றும் போலீ​ஸார் சம்​பவ இடத்​துக்கு விரைந்து சென்று விசா​ரணை நடத்​தினர். பாலமுருக​னின் உடலை கைப்​பற்றி பிரேத பரிசோதனைக்​காக தூத்​துக்​குடி அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

இந்​நிலை​யில், கொலை​யாளி​களை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி பாலமுருக​னின் குடும்​பத்​தினர், உறவினர்​கள் தாளமுத்​துநகர் ஆரோக்​கியபுரம் சந்​திப்பு பகுதி​யில் சாலை மறியலில் ஈடு​பட்​டனர். டிஐஜி திருநாவுக்​கரசு, எஸ்பி சிவபிரசாத் ஆகியோர் பேச்சு​வார்த்தை நடத்​தினர். கொலை சம்​பவத்​தில் ஈடு​பட்​ட​வர்​களை கைது செய்ய 4 தனிப்​படை அமைக்​கப்​பட்​டுள்​ளன. கொலை​யாளி​கள் விரைவில் கைது செய்​யப்​படுவார்​கள் என அவர்​கள் உறுதி அளித்​தனர். அதன்​பேரில் போராட்​டம் கைவிடப்​பட்​டது.

போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யில், உறவினரின் மகள் பூப்​புனித நீராட்டு விழாவுக்​காக, நேற்று முன்​தினம் இரவு பாலமுருகன் தாளமுத்​துநகர் பகுதி​யில் டிஜிட்​டல் பேனர் வைத்​துள்​ளார். அப்​போது அங்கு வந்த சிலர், அந்த பகுதி​யில் பேனர் வைக்​கக்​கூடாது என தக​ராறு செய்​துள்​ளனர். இத​னால் இருதரப்​பினர் இடையே கைகலப்பு ஏற்​பட்​டுள்​ளது. இதில் ஆத்​திரமடைந்த அந்த நபர்​கள், பாலமுருகனை தொடர்ந்து கண்​காணித்து கொலை செய்​துள்​ளனர் என்​பது தெரிய​வந்​தது.

இந்த கொலை தொடர்​பாக தாளமுத்​து நகர் பாலதண்​டாயுதம் நகரைச் சேர்ந்த சிவா என்ற சிவச்​சந்​திரன் (22), தூத்​துக்​குடி கே.வி.கே. நகரை சேர்ந்த சிவகுமார் (22), லூர்​தம்​மாள்​புரத்தை சேர்ந்த கோகுல்​நாத் (24), சோட்​டையன்​தோப்பை சேர்ந்த மணிகண்​டன் (20) மற்​றும் தூத்​துக்​குடி தெற்கு மாவட்ட திமுக சுற்​றுச்​சூழல் அணி அமைப்​பாளரான மாதாநகர் 5-வது தெரு​வைச் சேர்ந்த பொன்​பாண்டி என்ற ரவி (44) ஆகிய 5 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். தொடர்ந்து விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது.

<div class="paragraphs"><p>கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள். உள்படம்: கொலை செய்யப்பட்ட பாலமுருகன்</p></div>
தேனி சிறையில் தப்பியது 17 பேரா? 21 பேரா? - கைதி வெளியிட்ட வீடியோவால் சர்ச்சை

X