

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்ட மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பினர், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், தொழில் மற்றும் வர்த்தக சங்கத்தினர் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின், பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக பரமக்குடிக்கு அவர் சென்றுள்ளார்.
அங்கு, ராமநாதபுரம் மாவட்ட மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பினர், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், தொழில் மற்றும் வர்த்தக சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் என 50-க்கும் மேற்பட்ட சங்கங்களின் நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, ராமநாதபுரம் மாவட்டத்துக்கு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதற்காகவும், திமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டமைக்காகவும் நன்றி தெரிவித்து, திமுக கூட்டணிக்கு சட்டமன்ற பொதுத்தேர்தலில் தங்கள் ஆதரவினை தெரிவித்து, கோரிக்கை மனு அளித்தனர்.