போதைப் பொருள் புழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வைகோ வலியுறுத்தல்

போதைப் பொருள் புழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வைகோ வலியுறுத்தல்
Updated on
1 min read

திருச்சி: போதைப் பொருட்​களுக்கு எதி​ராக​வும், சமத்​துவ சமூக நல்​லிணக்​கத்தை வலி​யுறுத்​தி​யும் வரும் ஜன. 2-ம் தேதி திருச்​சியி​லிருந்து மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ நடைபயணம் தொடங்​கு​கிறார். இதற்​கான தொண்​டர்​கள் தேர்வு திருச்​சி​யில் நேற்று நடை​பெற்​றது.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் வைகோ கூறிய​தாவது: இளைஞர்​கள் கஞ்சா உள்​ளிட்ட போதைப் பொருட்​களை பயன்​படுத்தி வரு​கிறார்​கள். கல்​லூரி வரை வந்த போதைப் பொருள் இன்று பள்ளி வரை வந்​து​விட்​டது. இளம் வயதிலேயே சாதி, மத கருத்​துகளை விதைப்​ப​தால் மாணவர்​களிடம் மோதல்​கள் நடை​பெறுகின்​றன.

அவற்​றைத் தடுத்து நிறுத்த வேண்​டும். கஞ்சா உள்​ளிட்ட போதைப் பொருள் புழக்​கத்தை இரும்​புக் கரம் கொண்டு தடுக்க வேண்​டும். தற்​போது மேற்​கொள்​ளும் நடைபயணத்​தின்​போது திமுக ஆட்​சிக்கு ஆதரவு கோரி பிரச்​சா​ரம் மேற்​கொள்​வேன். என் மூதாதையர் சேர்த்த கோடிக்​கணக்​கான சொத்​துகளை பொது​வாழ்​வுக்கு வந்த பின்​னர் இழந்​தேன்.

அதை இழப்​பாக நான் கருத​வில்​லை. என் நாண​யம் குறித்து எதிர்க்​கட்​சிகள்​கூட முன்​வைக்​காத குற்​றச்​சாட்டை மல்லை சத்யா முன்​வைத்​துள்​ளார். பொய்​களால் எங்​களை கொச்​சைப்​படுத்த முடி​யாது. இவ்​வாறு வைகோ கூறி​னார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in