திருச்சியில் இருந்து மதுரைக்கு சமத்துவ நடைபயணம் தொடங்கினார் வைகோ

திருச்சியில் நேற்று சமத்துவ நடைபயணம் மேற்கொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. உடன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்டோர். | படம்: ர.செல்வமுத்துகுமார் |

திருச்சியில் நேற்று சமத்துவ நடைபயணம் மேற்கொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. உடன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்டோர். | படம்: ர.செல்வமுத்துகுமார் |

Updated on
1 min read

திருச்சி: ம​தி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ திருச்​சி​யில் இருந்து மதுரை வரை மேற்​கொள்​ளும் சமத்​துவ நடைபயணத்தை திருச்​சி​யில் நேற்று தொடங்​கி​னார். திருச்சி உழவர் சந்தை திடலில் நேற்று நடை​பெற்ற விழா​வில் தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கொடியசைத்து நடை பயணத்தை தொடங்​கி​வைத்​தார்.

தொடர்ந்​து, வைகோ மற்​றும் மதி​முக இளைஞரணி, தொண்​டரணி, மாணவரணி​யைச் சேர்ந்த நூற்​றுக்​கணக்​கானோர் நடைபயணத்தை மேற்​கொண்​டனர். திருச்சி அண்ணா நகர் சாலை, நீதி​மன்​றம் எம்​ஜிஆர் சிலை ரவுண்​டா​னா, மத்​தி​யப் பேருந்து நிலை​யம், கிராப்​பட்​டி, எடமலைப்​பட்டி புதூர் வரை நடைபயணம் சென்ற வைகோ உள்​ளிட்​டோர், அங்​குள்ள குழந்தை தெரசா தேவாலய வளாகத்​தில் மதிய உணவுக்​காக தங்​கினர்.

பின்​னர், மாலை எடமலைப்​பட்டி புதூரில் இருந்து புறப்​பட்டு திருச்​சி- மதுரை நெடுஞ்​சாலை வழி​யாக பஞ்​சப்​பூர் சென்​றடைந்​தனர். அங்கு தனி​யார் அரங்​கில் ஓய்​வெடுத்​தனர்.

நடைபயணம் செல்​லும் வைகோ உள்​ளிட்​டோருக்கு வழிநெடு​கிலும் மதி​முக​வினர் கரகாட்​டம், ஒயி​லாட்​டம், தாரை, தப்​பட்​டை, பேண்டு வாத்​தி​யத்​துடன் உற்​சாக வரவேற்பு அளித்​தனர். இன்று (ஜன.3) காலை பஞ்​சப்​பூரிலிருந்து புறப்​பட்டு நாகமங்​கலம், அளுந்​தூர் வழி​யாக பாத்​தி​மா நகர் செல்​கின்​றனர்.

முன்​ன​தாக, தொடக்க விழா​வில் வைகோ பேசி​யது: 1986-ல் மகரநெடுங்​குழை​காதர் கோயி​லில் கொள்ளை போன நகைகளை மீட்க தென்​திருப்​பேரை​யில் முதல் நடைபயணம் மேற்​கொண்​டேன். இது​வரை 10 நடை பயணங்​கள் மேற்​கொண்​டுள்​ளேன்.

இந்​துத்​துவ ஆதிக்க சக்​தி​கள் கூட்​டத்​தால் தமிழகத்​தில் சமய நல்​லிணக்​கம் பாழ்​பட்​டுப் போகுமோ என்று அஞ்​சும் சூழலை உரு​வாக்க, டெல்லி ஏகா​திபத்​தி​யத்​துக்கு அடிபணிவோர் துடிக்​கின்​றனர். எனவே, தமிழகத்​தில் சமய சண்​டைகள், மதப் பூசல்​களுக்கு இடமில்லை என்​பதை நிலை​நாட்​டவே இந்த நடை பயணத்தை மேற்​கொள்​கிறேன்.

அதே​நேரத்​தில், திரா​விட மாடல் ஆட்சி தொடர்ந்​தால்​தான் தமிழகம் பாதிக்​கப்​ப​டா​மல் இருக்​கும். எனவே, இந்த ஆட்சி தொடர வேண்​டும். அதற்காக தேர்​தல் களத்​தில் திமுக கூட்​ட​ணிக் கட்​சிகளை மகத்​தான வெற்​றி​பெறச் செய்​யு​மாறு மக்​களிடம் பிரச்​சா​ரம் செய்​வேன்.

முதல்​வர் ஸ்டா​லின் தலை​மையி​லான திமுக அரசு தொடர மதி​முக பாடு​படும். இவ்​வாறு வைகோ பேசி​னார். விழா​வில், இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் தலை​வர் கே.எம்​.​ காதர் முகை​தீன், விசிக தலை​வர் திரு​மாவளவன், திக பொதுச் செய​லாளர் துரை சந்​திரசேகரன், மநீம பொதுச் செய​லா​ளர் ஆ.அருணாச்​சலம், மதி​முக மாவட்​டச் செய​லா​ளர்​கள் வெல்​லமண்டி சோமு, மணவை தமிழ்​மாணிக்​கம், டிடிசி.சேரன் மற்​றும் கம்​யூனிஸ்ட் கட்​சிகளின் மாவட்ட நிர்​வாகி​கள் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர். மதி​முக பொருளாளர் செந்​தில​திபன் நன்றி கூறி​னார்​.

<div class="paragraphs"><p>திருச்சியில் நேற்று சமத்துவ நடைபயணம் மேற்கொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. உடன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்டோர். <em><strong>| படம்: ர.செல்வமுத்துகுமார் |</strong></em></p></div>
சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: பாமக, நாதக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in