திமுக உறவு அறுந்துவிட்டது என்ற பேச்சுக்கே அரசியலில் இடமில்லை: வைகோ கருத்து

“காலத்துக்கு ஏற்ப நிலைபாட்டை மாற்றுவது வழக்கம்தான்”
திமுக உறவு அறுந்துவிட்டது என்ற பேச்சுக்கே அரசியலில் இடமில்லை: வைகோ கருத்து
Updated on
1 min read

காரைக்குடி: ​தி​முக​வுடன் உறவு அறுந்​து​விட்​டது; முடிவுக்கு வந்​து​விட்​டது என்ற பேச்​சுக்கே அரசி​யலில் இடம் இல்​லை. அரசி​யல் கட்​சிகள் காலத்​துக்கு ஏற்ப தங்​களது அரசி​யல் நிலைப்​பாட்டை மாற்​று​வது வழக்​கம்​தான் என மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ கூறி​னார்.

சிவகங்கை மாவட்​டம் காரைக்​குடி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: நாட்​டில் எம்​.பி.களின் தொகுதி எண்​ணிக்​கையை அதி​கரிப்​பது ஜனநாயகத்​தின் அடித்​தளத்​தையே பாதிக்​கும். தொகுதி மறு​வரையறையை அனு​ம​திக்​கக் கூடாது என்று பேசிய திமுக தற்​போது நியாய​மான மறு​வரையறை​யாக இருக்க வேண்​டும் என்று தங்​களது நிலைப்​பாட்டை மாற்​றிக் கொண்​டது வருத்​தமளிக்​கிறது.

இந்​துத்​துவா சக்​தி​கள், ஆர்​எஸ்​எஸ் கொள்​கைகளை எதிர்க்​கவே காங்​கிரஸை ஆதரிக்​கிறோம். அதே நம்​பிக்​கை​யில்​தான் தவெக​வுடன் உடன்​பாடு வைத்​துள்​ளோம். திமுக​வுடன் உறவு அறுந்​து​விட்​டது; முடிவுக்கு வந்​து​விட்​டது என்ற பேச்​சுக்கே அரசி​யலில் இடமே இல்​லை. அரசி​யல் கட்​சிகள் காலத்​துக்கு ஏற்ப தங்​களது அரசி​யல் நிலைப்​பாட்டை மாற்​று​வது வழக்​கம்​தான். கடந்த தேர்​தலில் மதி​முகவை திமுக நடத்​திய விதத்​தால் கூட்​ட​ணி​யில் தொடரக் கூடாது என்ற பொதுக்​குழு​வின் முடிவு அடிப்​படை​யில் வெளி​யேறினோம்.

எல்​லாக் காலங்​களி​லும் கொலைச் சம்​பவங்​கள் நடக்​கின்​றன. கொலைகளை உடனே போலீ​ஸா​ரால் தடுத்து நிறுத்​தி​விட முடி​யாது. ஸ்டெர்​லைட் ஆலைக்கு எதி​ரான போராட்​டத்​தில் துப்​பாக்​கிச் சூட்​டில் 13 பேர் உயி​ரிழந்த சம்​பவத்​துக்கு காரண​மான போலீ​ஸார் மீது குற்​ற​வியல் வழக்​குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்​டும். சென்​னையி​லிருந்து நெடுந்​தூரத்​தில் விமான​நிலை​யம் அமைப்​பது சரி​யானதல்ல.

சட்​டப்​பேர​வை​யில் தற்​போது நடை​பெறும் நிகழ்​வு​களை​விட கடந்த காலங்​களில் மோச​மான மோதல்​கள் நடந்​துள்​ளன. நேரடி ஒளிபரப்​பால் மக்​கள் அனைத்து நிகழ்​வு​களை​யும் தெரிந்து கொள்​வது வரவேற்​கத்​தக்​கது. சாதி​வாரி கணக்​கெடுப்​பால் சில நன்​மை​கள் ஏற்​படலாம். அதே நேரத்​தில் பல கேடு​களும் ஏற்​படும். எனவே, சாதி​வாரிகணக்​கெடுப்பு நடத்​து​வதை மறு​பரிசீலனை செய்ய வேண்​டும். இவ்​வாறு கூறி​னார்.

திமுக உறவு அறுந்துவிட்டது என்ற பேச்சுக்கே அரசியலில் இடமில்லை: வைகோ கருத்து
“சர்க்காரியா கமிஷன் பற்றி நேருக்கு நேர் விவாதிக்க முதல்வர் விஜய் தயாரா?” - ஆர்.எஸ்.பாரதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in