மருத்துவமனையில் நல்லகண்ணுவிடம் நலம் விசாரித்த வைகோ

மருத்துவமனையில் நல்லகண்ணுவிடம் நலம் விசாரித்த வைகோ
Updated on
1 min read

சென்னை: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை சந்தித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நலம் விசாரித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு 101 வயதைக் கடந்த நிலையில், முதுமை காரணமாக ஏற்படும் உடல்நல பாதிப்புகளுக்கு அவ்வப்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த பிப்.1-ம் தேதி இரவு மீண்டும் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், உடனடியாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று மருத்துவமனைக்குச் சென்று, நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்தார்.

மருத்துவமனையில் நல்லகண்ணுவிடம் நலம் விசாரித்த வைகோ
கேரளாவில் தந்தையின் நிதி நிறுவன மோசடி விவகாரம்: தாம்பரத்தில் மாணவி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in