“கலாம் சபா நூலகம் சமூக இயக்கமாக மாற வேண்டும்” - ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு வேண்டுகோள்

சென்​னை, வியாசர்​பாடி​யில் உள்ள கலாம் சபா நூல​கம் சார்​பில் நேற்று நடைபெற்ற முப்​பெரும் விழா​வில் ராணுவ விஞ்​ஞானி வி.டில்லி​பாபு எழு​திய ‘வெள்​ளோட்டம் வெல்லட்​டும்’ நூலை சென்னை வானிலை ஆய்வு மைய முன்​னாள் இயக்​குநர் எஸ்​.ஆர்​.ரமணன் வெளி​யிட்​டார். உடன்​ காவல்​துறை ஐஜி சா​முண்​டீஸ்​வரி, இந்​துஸ்​தான்​ வி​மான​வியல்​ நிறு​வன தலை​மை மேலா​ள​ர் க.செல்​வி உள்​ளிட்​டோர்​.

சென்​னை, வியாசர்​பாடி​யில் உள்ள கலாம் சபா நூல​கம் சார்​பில் நேற்று நடைபெற்ற முப்​பெரும் விழா​வில் ராணுவ விஞ்​ஞானி வி.டில்லி​பாபு எழு​திய ‘வெள்​ளோட்டம் வெல்லட்​டும்’ நூலை சென்னை வானிலை ஆய்வு மைய முன்​னாள் இயக்​குநர் எஸ்​.ஆர்​.ரமணன் வெளி​யிட்​டார். உடன்​ காவல்​துறை ஐஜி சா​முண்​டீஸ்​வரி, இந்​துஸ்​தான்​ வி​மான​வியல்​ நிறு​வன தலை​மை மேலா​ள​ர் க.செல்​வி உள்​ளிட்​டோர்​.

Updated on
1 min read

சென்னை: கலாம் சபா நூலகம் ஒரு சமூக இயக்​க​மாக மாற வேண்​டும் என்று ராணுவ விஞ்​ஞானி வி.டில்​லி​பாபு தெரி​வித்​துள்​ளார். சென்னை வியாசர்​பாடி மல்​லிகைப்பூ காலனி​யில் ராணுவ விஞ்​ஞானி வி.டில்​லி​பாபு​வின் இல்​லத்​தில் ‘கலாம்​-ச​பா’ நூலகம் மற்​றும் வழி​காட்டி மையம் செயல்​பட்டு வரு​கிறது. இதை கடந்த 2024-ம் ஆண்டு நவ.8-ம் தேதி, விண்​வெளி விஞ்​ஞானி மயில்​சாமி அண்​ணாதுரை திறந்து வைத்​தார்.

இதன் செயல்​பாடு​களை விளக்​கும் ஆண்டு விழா, சிறப்பு விருந்​தினர்​கள் கலந்து கொண்டு புத்​தகங்​களை வாசிக்​கும் ‘வி​யாசர்​பாடி வாசிக்​கிறது’ நிகழ்வு மற்​றும் ராணுவ விஞ்​ஞானி வி. டில்​லி​பாபு எழு​தி​யுள்ள 10-வது அறி​வியல் நூலான ‘வெள்​ளோட்​டம் வெல்​லட்​டும்’ நூலில் அறி​முக விழா ஆகிய முப்​பெரும் விழா, வியாசர்​பாடி​யில் நேற்று நடை​பெற்​றது.

இதில் சென்னை வானிலை ஆய்வு மைய முன்​னாள் இயக்​குநர் எஸ்​.ஆர்​.ரமணன் பங்​கேற்​று, ‘வெள்​ளோட்​டம் வெல்​லட்​டும்’ நூலை வெளி​யிட்டு அறி​முகப்​படுத்​தி​னார். பின்​னர் அவர் பேசி​ய​தாவது: மாணவர்​கள் ஒவ்​வொரு​வரும் தின​மும் பள்ளி முடிந்து வீட்​டுக்கு வந்​து, இன்று நாம் என்ன கற்​றுக்​கொண்​டோம் என சிந்​திக்க வேண்​டும். அப்​போது​தான் மேலும் மேலும் புதிய விஷ​யங்​களை கற்​றுக்​கொள்ள ஆர்​வத்தை ஏற்​படுத்​தும்.

டில்​லி​பாபு எழு​தி​யுள்ள இந்த நூலில், ராணுவ தொழில்​நுட்​பங்​கள் எப்​படி செயல்​படு​கிறது என எளிய தமிழில் விளக்​கப்​பட்​டுள்​ளது. மாணவர்​கள் அனை​வரும் இதை படிக்க வேண்​டும். ஏழை மாணவர்​களின் முன்​னேற்​றத்​துக்​காக தொடங்​கப்​பட்ட இது​போன்ற கலாம் சபாக்​கள் எல்லா இடங்​களி​லும் திறக்​கப்பட வேண்​டும் என்றார்.

காவல்​துறை ஐஜி சாமுண்​டீஸ்​வரி பங்​கேற்​று, கலாம் சபா நூலக தன்​னார்​வலர்​களை கவுர​வித்​தார். இறு​தியில் விஞ்​ஞானி டில்​லி​பாபு பேசி​ய​தாவது: மாணவ, மாண​வியரின் வெற்​றிக்கு வெறும் பாடத்​திட்​டம் மட்டும் உதவுவ​தில்​லை. மாணவர்​கள் வகுப்​பறையை தாண்டி வாசிப்​பதும், பாடத்​திட்​டத்தை தாண்டி யோசிப்​பதும் அவசி​யம்.

அந்த வெற்​றிடத்தை நிரப்​பத்​தான் கலாம் சபா நூலகம் உதவு​கிறது. பலர் படித்து முடித்த பிறகு தான் அடுத்து என்ன செய்ய வேண்​டும் என்று யோசிப்​பார்​கள். இந்த கலாம் சபாவை பயன்​படுத்​து​வதன் மூலம் படிக்​கும்​போதே அடுத்து என்ன படிக்க வேண்​டும் என்​ப​தற்கு தயா​ராகி விடு​கின்​றனர்.

கலாம் சபா போன்ற முன்​னெடுப்​பு​களை எடுத்​து, அவர்​களின் தொடர்​பு​களை பயன்​படுத்தி விரி​வான சிந்​தனை​களை விதைத்​து, இதை ஒரு இயக்​க​மாக மாற்ற வேண்​டும். இதை தனிமனித முயற்​சி​யாக இல்​லாமல் ஒரு சமூக இயக்​க​மாக கொண்டு செல்ல வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

இந்​நிகழ்ச்​சி​யில், டில்​லி​பாபு​வின் மனை​வி​யும், இந்​துஸ்​தான் விமான​வியல் நிறுவன தலைமை மேலா​ள​ரு​மான க.செல்​வி, டில்​லி​பாபு​வின் தந்தை ச.விஜயகு​மார், ஆளுமை சிற்பி மாத இதழ் ஆசிரியர் மெ.​ஞான​சேகர் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

<div class="paragraphs"><p>சென்​னை, வியாசர்​பாடி​யில் உள்ள கலாம் சபா நூல​கம் சார்​பில் நேற்று நடைபெற்ற முப்​பெரும் விழா​வில் ராணுவ விஞ்​ஞானி வி.டில்லி​பாபு எழு​திய ‘வெள்​ளோட்டம் வெல்லட்​டும்’ நூலை சென்னை வானிலை ஆய்வு மைய முன்​னாள் இயக்​குநர் எஸ்​.ஆர்​.ரமணன் வெளி​யிட்​டார். உடன்​ காவல்​துறை ஐஜி சா​முண்​டீஸ்​வரி, இந்​துஸ்​தான்​ வி​மான​வியல்​ நிறு​வன தலை​மை மேலா​ள​ர் க.செல்​வி உள்​ளிட்​டோர்​.</p></div>
கிண்டியில் ரூ.417 கோடியில் குழந்தைகள் உயர் சிறப்பு மருத்துவமனை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in